Abiramam natham

Tamil christian wallpapers

Posted in Thursday, 24 November 2011
by Abiramam jo


bible verse wallpapers


Tamil christian wallpapers


psalm:119:105

2corinthians

psalm:5:3

Isiah:52:12

Isiah:49:15

Isiah:42:16

Isiah:32:18

psalm:128:5


Read more

Abiramam Natham Latest News

Posted in Tuesday, 22 November 2011
by Abiramam jo

For Abiramam natham latest news visit the following websites
http://www.helloabiramamnatham.blogspot.com,
http://www.abiramam.wordpress.com,
http://www.about-abiramam-natham.blogspot.com

Read more

paramakudi to abiramam

Posted in Thursday, 10 November 2011
by Abiramam jo

Paramakkudi To Abiramam Distance

Paramakkudi is one of the India city. It is located at the longitude of 78.61 and latitude of 9.51. Abiramam is a India city located at the longitude of 78.51 and latitude of 9.51 . The total distance between Paramakkudi to Abiramam is 17 KM (kilometers) and 218.72 meters. The mile based measurement distance is 10.7 miles Paramakkudi direction from Abiramam: Paramakkudi is located nearly east side to Abiramam. Traveling from Paramakkudi to Abiramam is connected by more than one route. Soon you may expect those different routes to reach Abiramam, Abiramam natham ,ask anything from abiramam natham,tamilnadu abiramam,natham,www.google.com,about abiramam natham,abiramam.wordpress.com,abiramam best site www.helloabiramam natham

Read more

கர்த்தர் எங்களுடன் எப்படிப்பேசுகின்றார்

Posted in Friday, 4 November 2011
by Abiramam jo

1. தன்னுடையவேதாகமத்தின் வார்த்தைக்கூடாக எங்களுடன்பேசுகிறார்.

வேதாகமம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு 40தேவ மனுசர்களினால் எழுதப்பட்வை..அதில் பழைய ஏற்பாட்டில் 39 புத்தகமும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகமுமாகமொத்தம் 66 புத்தகங்ளைக்கொண்டுள்ளது. இவை வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புள்ளதாவே காணப்படுகின்றன. அனுதினமும் இந்த வார்த்தைளை நாம் வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசிக்கொண்டேயிருக்கின்றன. எங்களுடைய சகலகேள்விகளுக்கும் வேதாகமத்திற்குள் விடை காணப்படுகின்றது அவற்றை புரிந்துகொள்ளும் கையில் மன அமைதலுடன் நாம் அவற்றை வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசுவதை நாம் உணர்ந்து கொள்வோம்.ஆனால், கர்த்தரடைய வார்த்தையைக் கவனிப்பது மட்டுமல்ல அதன்படி நாம்செயற்படலும்வேண்டும். அப்படி நாம்செய்யாவிடில் எங்ளை நாங்ளே ஏமாற்றுபவர்களாகவிருப்போம். வார்த்தயை அவதானித்தும் அதன்படி நடக்காதிருப்போமாகில் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவர்களைப்போலவே நாமும் இருப்போம். அதாவது கண்ணாடியில் எங்கள் தவறுகள் சுட்டுக்காட்டப்படும் அதனை சீர்செய்ய மறுப்பவர்ளேப்போலக் காணப்படுவோம்.(யாக்கோபு 1:22-23)

வானமும்பூமியும்ஒழிந்துபோகும், என்னுடைய வார்த்தைளோ ஒழிந்துபோகாது என்று இயேசுசொன்னார்..(மத்தேயு 13:31)

ஆம் அந்த வார்த்தைகள் வேதாகாமம் மூலமாக எங்களுடன் பேசிக்கொண்டே இருக்கும்.

வேதவாக்கியங்கள் எல்லாம்தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது ,தேவனுடைய மனுசன் தேறினவனாகவும் ,எந்த நற்கிரிகயைச் செய்யத்தக்க தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக , அவைகள் உபதேசத்திற்கும் , கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் ,படிப்பித்தலுக்கும், பிரயோசனமுள்ளவைகளாக இருக்கிறது. (2 திமேத்தி 3:16-17) அவற்றைக்கேட்டு அதன்படிசெய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசுசொன்னார்.(லூக்கா.11:28)

2. தீர்க்கதரிசிகள் மூலமாக.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தர் ஜனங்களுடன் பல தீர்க்கதரிசிகளிற்கூடாகப் பேசியுள்தை நாம் பார்க்கலாம்.

நோவா நீதியைக்குறித்துப் பேசுவதற்காகப் பயன்படுத்தப்பட்டார்( 2 பேதுரு 2:5)

மேச பிரதான தீர்க்கதரிசியாக எண்ணப்பட்டார். அவர் அதிக புத்தகங்ளை எழுதியுள்ளார்.( உபாகமம். 34:10-12) அவருக்குப்பின்பு ஜனங்களை வழிநடத்திய யோசுவாவும் தீர்க்கதிரிசியின் வேலையைச் செய்தார்.( உபாகமம் 34:9,யோசுவா 1:1, 5.)

எபிரேய ஜனங்கள் கானான் தேசத்திற்குள் நுழைந்தபிற்பாடு பலதீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்ளைப் பாதுகாப்பதற்காகவும் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் தோன்றினார்கள்..

முழுத்தீர்க்க தரிசிகளுள் சிலதீர்க்கதரிசிளே வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளார்கள்.

அனேகமான தீர்க்கதரிசிகள் அறியப்படாதவர்களாகிவிட்டார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள்செய்திளை எழுத்தில் வடிக்கவில்லை. அவர்கள் வாய்மொழி மூலமாகப் பிரச்னைகளை வெளிப்படுத்தினார்களே தவிர எழுத்து வடிவில் உருவாக்கவில்லை.

.

யோசுவாவிற்குப்பிற்பாடு ஜனங்கள் விக்கிரக வணக்கத்தை மேற்கொண்டபோது பெயர் குறிப்பிடாத தீர்க்கதரிசிமூலமாக கர்த்தர் எகிப்திலிருந்து விடுவித்தை ஞாபகப்படுத்தினார். (நியாயாதிபதிகள். 6: 7-10)

சாமுவேல் தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், நியாயாதிபதியாகவும் செயற்பட்டார்.இப்படி பல தீர்க்கதரிசிகளுக்கூடாக தேவன் ஜனங்களோடு பேசி அவர்ளை வழிநடத்தியதை வேதாகமத்தலே நாம் காணலாம்.வேதாகமத்தில் எழுத்து வடிவில் ஏசாய தொடங்கி மல்கியாரை 17 தீர்க்கதரிசிகள் ஜனங்களோடு பேசியதை நாம் வாசிக்கறோம். இவர்ளை பிரதான தீர்க்கதரிசிகள் என்றும் சிறிய தீர்க்கதரிசிகள் என்றும் கைப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

தற்கால சபைகளில் ஐந்துகை ஊழியங்கள் செயற்படுதை நாம் பார்க்கிறோம். அவையாவன

அப்போஸ்தலர்கள்,

தீர்க்கதரிசிகள்,

சுக்ஷேசகர்கள்,

மேய்ப்பர்கள்,

போதகர்கள் ( எபேசியர். 4:13)

இங்கும் சபைகளில் உள்ள அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிக்ஷேசகர்கள்,மேய்ப்பர்கள்,போதகர்கள் ஆகியோர்களக்கூடாக பல இரகசியங்ளை மக்களுக்குப் பேசுக்கொண்டேயிருக்கின்றார்.

3. கர்த்தர் தனது தூதர்கள் மூலம்பேசுகிறார்.

கர்த்தருடைய தூதர்கள்பற்றி வேதாகமம் என்னசொல்கிறது? வேதாகமத் தரவுகள் கர்த்தருடைய தூதர் என்பது , உண்மையில் கர்த்தர் தாமே தூதர்களாய் தோன்றினார் என்பதைக் காண்பிக்கின்றது. “யாவே” அல்லது யேகோவா” என்ற நாமத்தினால் தூதர்கள் தோன்றினார்கள், அவர்களடைய ஒவ்வொரு தோற்றமும் கர்த்தருடைய உடன்படிக்கையின் வாக்குத்த்த்தங்களுடன் அவருடைய அளவற்ற பிரசன்னத்தோடும், அவருடைய நம்பிக்கையுடனும் தொடர்புள்வையாக விருந்தன. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கிறுஸ்துவின் அடையாளமாக “இருக்கிறவராவே இருக்கறேன்” என்ற கூறிய தூதர் கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன, கர்த்தரடைய ஒரேபேறான மகன் யேசுவாக அவதாரம் பெறுவதற்கு முன் துதராகத் தோற்றமளித்துள்ளார் என்று பலவேத ஆராய்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.

யேசுக்கிறிஸ்த்து பிறந்த பிற்பாடு கர்த்தருடைய தூதர் என்ற பதம் எங்கும் பாவிக்கப்படவில்லை கிறிஸ்த்து அவதாரம் பெறுவதற்குமுன் தூதராகச் செற்பட்டிருந்தால் கர்த்தருடைய உடன்படிக்கையின் வாக்குத்தங்கள் புதிய கருத்துக்ளைக் கொண்டதாக இருக்கும். “பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்ற ஆபிரகாமுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத் தத்தம் நீறைவேற இயேசு மாமிசத்தில் வந்தார், (அதி. 12:3) . எல்லோரும் கர்த்தருடன் தனிப்பட்ட உறவு மேற்கொள்ளும் வகையில் கிறிஸ்த்து சிலுலையில் மரித்தார், திரும்ப உயிரத்தெழுந்தார். இயேசுக்கிறிஸ்த்துதான் இரட்சகர் என்று நற்செய்திநூல் சொல்லும் செய்தியை ஏற்றக்கொள்ளும் போது, கர்த்தரின் உடன்படிக்கையுடன் தொடர்புள்ள விசுவாசிகள் கூட்டத்தில் நாங்களும் அங்கத்தவராகின்றோம். கர்த்தருடன் கொள்ளும் உறவு சாதாரணமாக அவர் எப்போதும் ஜீவிக்கிறார், என்றும் ஜீவிப்பார், என்றும் தனது வார்த்தையில் உண்மையுள்ளவராய் இருப்பார்,என்ற நம்பிக்கயை ஆரம்பத்திலிருந்து,ஆதாரமாயிருக்கிறது. ஆகரைப்போல் வழிகாட்டலையும் நடத்துலையும் கர்த்தரிடமிருந்து எங்களில் நாம் பொற்றுக் கொண்டிருக்கிறவர்கள் யார். ஆபிரகமைப்போல், நிச்சயமில்லாத, குழப்பம் நிறைந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். மோசேயைப்யோல உயிர்பெறக்கூடிய கனவு காண்கிறோமா? கிதியேனைப்போல எப்பலவீனங்ளையும் மேற்கொள்ளக் கூடிய பலம்கொண்டிருக்கிறேமா? எலியவைப்போல் எங்கள் வாழ்க்கையில் தோல்விகளில் வெற்றி பெறும்படி தேற்றப்படுகிறோமா? தாவீதைப்போல் பாவம்செய்யும் போது பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெறுகிறோமா? எசேக்கியாவைப்போல் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுகிறோமா? , கர்த்தருடைய நல்ல எதிர்காலத்திட்டங்கள் எங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது

கர்த்தர் உடன்படிக்கை ஏற்படுத்தினார்.(ஆதி. 12: 1-3)

கர்த்தர் ஆபிரகாமுடன் ஏற்படுத்தின உறவு ஆதியாகமம்12 இல் ஆழமாகவுள்ளது.

ஆபிராம் என்ற மனிதனுக்கு கர்த்தர் காட்சிகொடுத்து ஊர் என்ற நகரத்தை விட்டு கர்த்தர் காண்பிக்கும் தேசத்திற்குப் போகும்படி சொல்லியிருந்தார். ஆதியாகமம் 12 இல் ஒருதொடர் வாக்குத்தத்தங்கள் பதிவாகியுள்ளன, அவைகள்​ முழுவதும் பழையஏற்பாட்டிற்கு ஒரு வடிவத்தையும் முக்கியத்தையும் கொடுக்கின்றன. கர்த்தர் கூறினார்

ஆபிராம்:-

நான் உன்னைபெரிய ஜாதியாக்கவேன்

நான் உன்னை ஆசீர் வதிப்பேன்.

உன்பெயரைப் பெருமைப் படுத்துவேன்

நீ ஆசீர் வாதமாய் இருப்பாய்.

உன்னை ஆசீர்வதிக்கிறவர்ளை நான் ஆசீர்வதிப்பேன்

உன்னைச் சபிக்கிறவர்ளைச் சபிப்பேன்

பூமியிலுள்ள வம்சங்ளெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.(ஆதி.12:1-3)

கர்த்தரடைய தூதன்:- இந்தப்பெயரில் சில தடவைகள் பழைய ஏற்பாட்டில் தூதர்கள் தோன்றியுள்ளார்கள்.வேதாகமத்தில் ஆகாருக்குத் தோன்றியதூதர் மிகவும் அற்புதமான துதராகும்.அவரை “கர்த்தரின் தூதன்” என்று அழைக்கிறார்கள், பல தடவைகள் பழைய ஏற்பாட்டில் இவர் காட்சியளித்துள்ளார்.

கர்த்தரடைய தூதன் அதிக ஞானமுள்ள விடயங்ளைக் காண்பித்தார். (ஆதி. 16:8)

ஆகாரை தூதன் சந்தித்ததைப் பார்க்கும்போது பல விடயங்ளை நாங்கள் அவதானிக்க முடியும்.

கர்த்தரடைய தூதன் சொன்னார், ஆகார், சாராளுடைய அடிமை… இந்த்த் தூதனுக்கு ஆகார் யார் என்று மிகவும் சரியாகத்தெரிகிறது. அவளுடைய பெயர் சரியாகத்தெரிகிறது மட்டுமல்ல அவள் சாராளின் அடிமைப்பெண் என்றும் தெரிகிறது. ஆவிக்குரிய சம்பவங்கள் என்ன என்று எங்களுக்கு விளங்காது, ஆனால் தூதர்களுக்கு நன்றாக விளங்கும்,

எங்கிருந்து வருகிறாய் எங்கே போகிறாய்” ? இந்தக்கேள்வி அறியமையால் கேட்கப்பட்ட தல்ல, ஆகரை பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதற்காகன நோக்கத்துடன் கேட்கப்பட்டு, அவளுடைய பதிலினால் வெற்றியும் அடைந்தார்கள்.

“ என்னுடைய எஜமாட்டி சாராளிடமிருந்து தப்பி ஓடுகிறேன்” ஆகார் இரண்டாவதுகேள்விக்கு விடைகூறவில்லை, எங்கேபோவது என்று தெரியாமல் ஓடுகிறாள். ஆகாரைப் நாமும் சிலவளைகளில் ஓடித்திரிகிறோமல்லவா?

கர்த்தரடைய தூதன் கர்த்தரடைய சொந்த அதிகாரத்தோடுபேசினார். (ஆதி.16:9-12)

கர்த்தரடைய தூதன் அவளுக்குச்சொன்னார் “ உன்னுடைய எஜமாட்டியிடம் திரும்பிப்போ, அவளுடைய கரங்களுக்குள் அடங்கியிரு” (9). இது ஒருவேண்டுகோள் அல்ல, ஆனால் கட்டளை. இந்தக் கட்டளை ஒரு வழிநடத்தலையும் செய்கிறது, ஆகார் எங்குபோவது என்று அறியாதிருந்தாள், ஆனால் கர்த்தரடைய தூதருக்கு ஆகார் கட்டாயம் திரும்ப்போயாக வேண்டும் என்றுதெரியும்

கர்த்தரடைய தூதன் அவளுக்குச்சொன்னார், உன்னுடைய சந்ததியை நான் அதிகமாக்க​ப பெருகப் பண்ணுவேன், அதுபெருகி எண்ணி முடியாததாய் இருக்கும் என்றார், கர்த்தருடைய தூதன் இவ்வாறு உறுதிப்படுத்தினார்.

கர்த்தருடைய தூதன் என்பவரே தூதன் வேடத்தில் வந்த கர்த்தராக (கிறிஸ்துவாக) விருக்கிறார். (ஆதி.16:13.)

அவள் அவரை என்னைக் காண்கிறதேவன் என்றுபெயரிட்டாள். கர்த்தர் ஆகரை மட்டுமல்ல என்னையும் உன்னையும் காண்கிறவராவே இருக்கிறார். நீ அவருக்கு உண்மையாய் நடந்தால் உன்னோடும் அவர்பேசுவார், உன்னையும் வழிநடத்துவார்.

கர்த்தருடைய தூதன் மேசேக்கு காட்சி கொடுத்தல். (யாத்.1-3 அதிகாரங்கள்)

உடன்படிக்கையின் தொடர்பு (யாத்.1:15,16)

மேசேக்கு கர்த்தர் காட்சி கொடுத்போது இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள்

பார்வோன், இஸ்வேலர்கள் ஆண்பிள்ளைகள்பெற்றால் உடனடியாக அவற்றைக் கொல்லும்படி கட்ளையிட்டிருந்தான்.. இந்த அடிமைகள் ஆபிரகாமின் சந்த்தியினர்.அவருக்கு கர்த்தர் நல்ல வாக்குத்தத்தங்களை கொடுத்திருந்தார். நிச்சயமாக அவர் அவற்றை நிறைவேற்றுவா மேமசே மந்தைகளை மேய்த்துக் கொண்டிருக்கம்போது கர்த்தருடைய தூதன் ஒரு முள்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவலையிலே நின்று அவனுக்கு தரிசனமாகி, எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தைக் கண்டேன், அவர்கள் கூக்கரல் என் சமூகத்திற்கு வந்துள்ளத்து, அவர்களை எகிப்திலிருந்து விடுலையாக்கி பாலும்தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு கொண்டுசெல்ல சித்தமாயுள்ளேன். நான் உன்னை அந்வேலைக்காக அனுப்ப சித்தமாயுள்ளேன் என்றார்.

தூதர் மேசேயின் கனவைப் புதுப்புத்தல் (யாத். 3:7-10)

மேசேயினுடைய இளம்பிராயக் கனவு 40 வருடங்களாக மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த காலத்தில் செயலற்று மரித்துப் போயிருந்த்து அவருடைய நம்பிக்கை வறண்டபோயிருந்த்து, ஆனால் அதேசெயற்பாட்டிற்காக கர்த்தருடைய தூதன் மீண்டும் மேசயை அழைக்கின்றார். அவர் நலிந்போயிருந்த நம்பிக்கயை மீண்டும் திடமான நம்பிக்கையாக மாற்றினார்.

தூதன் கர்த்தரடைய செயற்பாட்டை உறுதிப் படுத்தினார்.(யாத். 3: 12-20)

இந்தநேரத்தில் கர்த்தர் தன்னுடைய சொந்தப்பெரை (இருக்கிறவராகவே இருக்கியேன்) மேசேக்கு அறிவித்தார், அத்துடன் இந்தப் பெயராலேயே அவருடைய ஜனங்கள் எப்போதும் அறிந்துகொள்வார்கள் என்றார். இதற்கு மேல் என்ன வேண்டும், ​கர்த்தர் தனது செயல் விருப்பத்தை விளங்கப் படுத்தினார் தொடர்ச்சியான பல அற்புதச்செயல்கள்மூலம் இஸ்வேலர்ளை எகிபதைவிட்டு வெளியேகொண்டுவந்தார். அவர் தனது உடன்படிக்கயைக் காத்துக் கொண்டார். ஆபிரகாமின் சந்த்தியினர் அடிமை வாழ்வு வாழுவதற்கு நியமிக்கப்படவில்லை. ஆபிரகாமின் சந்த்தியாரை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து வாக்குப் பண்ணப்பட்ட தேசத்திற்குள்கொண்டு செல்வதே அவரது நோக்கமாகும்.

கர்த்தரடைய தூதன் காட்சிகொடுத்தோர் விபரம்

பாலாம் எய்ணாகமம் 22: 22-35.

கிதயோன் நியாயாதிபதிகள். 6: 11-22

மனோவா, மனைவி நியாயாதிபதி. 13-16

தாவீது இராஜா 2 சாமு 24:, 1நாளாகமம்21: 12-18, 30

எலியா 1 இராஜா. 19:7, 2இராஜா 1:3,15

அசீரியா இரானுவம் அழிப்பு 2இராஜா.19:35, ஏசாயா 37:36.

சகரியா சகரியா 3:5, 12: 18

4. கனவுகள் மூலமாகவும் தரிசனங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசுகின்றார்.

கர்த்தரின் விருப்பத்தின்படியும் அனுதினமும் அவரைத்துதித்து ஆராதனை செய்கிறவர்கள் மீது தேவன் பிரியமாய் இருக்கிறார். அதாவதுஅனுதினமும் ஜெபம் செய்யும் மனிதர்களுடன் தேவன் உறவாட விரும்புகிறார்.

கனவுகள்:- மனதில் ஏற்படும் சிந்னைகள் பதிவுகள் என்பன மனிதனின் உறக்கத்தில் சிந்னைக்கூடாக கடந்துசெல்பவையாகும். பழைய சமய நுல்களில் கனவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன பழைய காலங்களில் கனவுகள் விஷேடமாக இராஜாக்களும், ஆசாரியர்களும், கடவுள் தன்னுடைய செய்திளை கனவுகளுக்கூடாகத் தெரியப் படுத்துகிறார் என்று கருதினார்கள்.(எண்ணாகமம் 12:6, ஆதி.31:10-13). வேதாகமத்தில் இவைகள் தீர்க்கதரிசன செய்திகளாகக் காணப்பட்டன. எலிகூ தன்னடைய கூற்றில்தெளிவாக கடவுள் கனவுகளுக்கூடாகபேசுகிறார் என்று கூறகிறார்

பாவம்செய்யால் தடுக்கிறார்.

கனவின் மூலமாக் கேகாரின் இராஜாவாகிய அபிமலேக்கை சாரளைத் தொடவேண்டாம் என்று கர்த்தர் எச்சரிக்கிறார், ஏனெனில் அவள் ஆபிரகாமுக்கு மனைவியாக இருந்தபடியால். (ஆதி 20:1-6)

ஆபிரகாமுடன் செய்த உடன்படக்கையை யாக்கோபோடும் புதிப்பித்தார்.

யாக்கோப்பு ஒரு இடத்தில் வந்து சூரியன் அஸ்தமித்தபடியால், அஙகே இராத்தங்கி, அவ்விடத்து கற்களில் ஒனறை எடுத்த, தன் தலையின் கீழ்வைத்து , அங்கே நித்தரைசெய்யும்படி படுத்துக்கொண்டான். அங்கே அவன் ஒரு

சொப்பனங்கண்டான், இதோ , ஒரு ஏணி பூமியலேவைக்கப்பட்டிருந்த்து, அதன் நுணி வானத்தை எட்டியிருந்த்து, அதிலேதேவதுதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்க்ள் அதற்குமேலாக கர்த்தர் நின்று நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின்தேவனும், ஈசாக்கின்தேவனுமாகிய கர்த்தர், நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்த்திக்கும் தருவேன், உன் சந்ததி பூமியின் தளைப்போலிருக்கும், , நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும்,தெற்கேயும் பரம்புவாய், உனக்குள்ளும் உன் சந்த்திக்குள்ளும், பூமியுன் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடேயிருந்து , நீபோகிற இடமெல்லாம் உன்னைக் காத்து , இந்தத்தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன், நான் உனக்கு சொன்தைச்செய்யுமளவும், உன்னைக் கைவிடுவதில்லைனெறு சொன்னார்.

இந்தக் கனவுக்கூடாக கர்த்தர் யாக்கோப்போடு பேசினார், அவர் உடன்படிக்கயை புதுப்பித்துக் கொள்வதாகவும், தன்னுடைய பிரசன்னமும் பாதுகாப்பும் யாக்கோப்புக்கு கிடைக்கும் என்றும் உறுதிப்படுத்தினார்.

இதுதேபோலவே , உன் தகப்பனோடு ஆண்டவர் உடன்படிக்கை செய்திருந்தால் உன்னோடும் அதைப் புதுப்பித்துக் கொள்ளுவார் . நீ அதற்கு கர்த்தரோடு எப்போதும் தொடர்பு உள்ளவனாக்க் காணப்படவேண்டும்..(ஆதியாகமம் 28:10-22)

பழைய ஏற்பாட்டுக் காலங்களில் ஏற்பட்ட கனவுகளை இரண்டு வகையாக மொழி பெயர்ப்பாளர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள்.

யேசேப்புகான உயர்ச்சிக்கான கனவு

முதலாவது வகை யோசேப்புக்குரியது. யேசேப்பை எப்படி கர்த்தர் உயர்த்தப்போகிறார் என்பதை அந்தக் கனவுகள் மூலம் ஆண்டவர் வெளிப்படுத்தினார். இந்தக் கனவுகளின் அர்த்தத்தையும் யோசேப்புக்கு ஆண்டவர் கொடுத்தார்.(ஆதி. 37:5-10) கனவுளை கர்த்தர் எங்களுக்குத் தரும்போது அதனுடைய அர்த்தத்தையும் நாம் கேட்டுப்பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

தேசத்தைக் குறித்த தரிசனம்

நேபுகாச்நேச்சராகிய பாபிலோன் ராஜா கண்ட கனவுக்கு அவரால் அர்த்தத்தை அறிய முடியவில்லை அதனால் அவர் தனது இராஜ்ஜியத்திலுள்ள சகல சாஸ்திரிளையும்,யோசியர்ளையும் அழைத்து தான் கண்ட தரிசனத்தையும் அதன் அர்த்தத்தையும் கூறம்படி அவர்களுக்கு கட்ளையிட்டான், அவர்கள் சொல்லத் தவறும் பட்சத்தில் சகல புத்திசாலிகள் என்ற அழைக்கப்படும் சாஸ்திரிளையும் யோசியர்ளையும் கொலை செய்து விடுவதாக கட்ளையிட்டான். தானியெல் கர்த்தரிடம் இந்தப்பிரச்னயைக் கொண்டுவந்தார், கர்த்தர் கனவையும் தானயேலுக்குக் காண்பித்து அதன் அர்தத்தையும் வெளிப்படுத்தினார். (தானி 2:14-45)

உனது வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்படும்போது அதனை நீ கர்த்தருடைய சமூகத்துக்குகொண்டுசென்று உதவிகேட்கும்போது அதற்கு ஆண்டவர் நிச்சயமாகப் பதில் தருவார்

பாபிலோனின் நேபுகாசநேச்சரினுடையதாகும். இரண்டு வகையான கனவுகளும் எதிர்காலத்தைக் குறித்தவையாகும். யேசேப்புவுக்கும் தானியேலுக்கும் அந்தக் கனவுகளை மொழிபெயர்க்கும் திறனைக் கர்த்தர் கொடுத்துள்ளார்.(ஆதி: 40: 8, 41:12,) (தானி 2: 20-45) ). பழைய ஏற்பாட்டுக் கனவுகள் அனேகமாக இஸ்ரவேலின் தீர்க்க தரிசிகளுடன் தொடர்புள்வைகளாகும். ( உபாகமம் 13: 1-5​ ஜெரேமியா23 25-32) ).

மேசியவைப் பற்றிய கனவு

புதிய ஏற்பாட்டில் , கர்த்தர் மரியாளின் கணவனாகிய யோசேப்புவுக்கு கனவில் தோன்றி வரப்போகின்ற இயேசுக் கிறிஸ்த்துவைப் பற்றிக் கூறினார்.(மத்தேயு 1:20). குழந்தை இயேசுவைப் பாதுகாக்கும்படி கனவில் கர்த்தர்பேசினார். (மத் 2: 13-14)

தரிசனம் என்பது மிகவும் அதிஉன்னத்தேவனின் எதிர்கால வெளிப்பாடாகும். கனவுகள் ஒரு மனிதனின் உறக்கத்தில்தோன்றுகின்றன, ஆனால் தரிசனம் என்பத்து ஒரு மனிதன் விழித்திருக்கும் வேளையில் ஏற்படுவதாகும்.(தானி. 10:1-11) வேதாகமத்தில் , தரிசனம்பெற்ற மனிதர்கள் கர்த்தரடைய விஷேசித்த விழிப்புணர்வுள்ள இருதயத்தைக் கொண்டிருந்தார்கள். இவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் எசேக்கியேலும் தானியேலுமாவார்கள் புதிய ஏற்பாட்டில் முக்கியமாவை லுக்கா சுவிஷேசம், அப்போஸ்தலப் புஸ்தகம்,வெளிப்படுத்தல் புஸ்தகமுமாமே. . தரிசனங்கள் கொடுக்கப்படுவதன் நோக்கம். வழிகாட்டுதலும், இயக்குதலமாகும். தானியேலின் தரிசனம் மேசியாவின் வருகைபற்றிக் கூறியது.(தானி. 8:1,17)

யோவேல் 2: 28.-29.(அப்,2:17-18) அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்போது உங்கள் குமார்ரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம்சொல்வார்கள், உங்கள் மூப்பர்கள் சொப்பனங்ளையும் , உங்கள் வாலிபர்கள் தரிசனங்ளையும் காண்பார்கள்.

29. ஊழியக்கார்ர்மேலும் ஊழியக்காரிகள்மேலும் அந்நாள்களில் என் ஆவியை ஊற்றுவேன்.

5. அற்புதங்கள் மூலம் கர்த்தர் பேசுகின்றார்.;

கர்த்தருடன் மிகவும் அன்பாயிருந்த மரியாளுடைய சகோதரன் லாசரு வியாதிப்பட்டிருந்தான். கர்த்தருக்கு பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் துடைத்தவள் அந்த மரியளே. லாசரு வியாதிப்பட்டிருக்கிறான் என்றசெய்தி இயேசுக்கிறிஸ்த்துவுக்கு ஒரு ஆள்மூலம்சொல்லி அனுப்பப்பட்டது. ஆனால் இதைக்கேள்விப்பட்ட இயேசுமேலும் இரண்டு நாள்கள் அதேயிடத்தில் தங்குவதற்கு முடிவுசெய்தார். ஏனெனில் லாசருவின் வியாதிக்கூடாக அவர் பிதவை மகிமைப்படுத்த விரும்பினார்.

லாசரு மரித்துப்போனான் என்பதை இயேசு ஆவியலே உணர்ந்தகொண்டார். அவர் தன்னுடைய சீடர் களைப்பார்த்து லாசரு மரித்துப் போனான் நான் அவனை எழுப்பப்போகிறேன் , அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று அவர்ளை அழைத்துச் சென்றார். இயேசு அங்கு வந்போது அவன் கல்றையில்வைக்கப் பட்டு நான்கு நாள்களாயிற்று என்று அறிந்து கொண்டார். அங்கு மார்த்தாள் மரியாள் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அநேகர் அங்கு வந்திருந்தார்கள். மார்த்தாள் மிகுந்த துக்கத்துடன் இயேசுவினிடத்தில் வந்து நீர் இங்கு இருந்திருப்பீரானால் என் கோதரன் மரித்திருக்க மாட்டான் என்று வேதனையோடு கூறினாள். அதற்குயேசு உன் கோதரன் உயிர்த்தெழுவான் என்று கூறினார்.அதற்கு அவள் உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்து எழுவான் என்றாள். நனே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்றார். உயிரோடு இருந்து என்னை விசுவாசிகிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் இதை நீ விசுவாசிக்கிறாயா என்றார்.”

மரியாள் அழுவதைப்பார்த்து இயேசுயேசு கண்ணீர் விட்டார். .உண்மையாய் நீயும் இயேசவை விசுவாசித்தால் உன்னுடைய துக்கத்திலும் அவர் பங்குபற்றிக்கொள்வார். கல்றையினிடத்திற்கு வந்தார்.இயேசு வானத்தை நிமிர்ந்து பார்த்து பிதவைநோக்கி “ நீர் எப்பொழுதும் எனக்குச்செவகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கறேன், ஆனாலும் என்னை நீர் அனுப்பினதை சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும் படியாக அவர்கள் நிமித்தம் இதைச்சொன்னேன் என்றார்” தன்னை நம்பாதவர்கள் மத்தியில் தான் பிதாவினால் அனுப்ப்ப்பட்டவர் என்தைக் காண்பிக்கும் பொருட்டு இவ்வாறு நடந்துகொண்டார்.

பின்பு கல்றைக்கு அருகில் நின்று லாசரவே வெளயே வா என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார். அப்பொழுது மரித்தவன் வெளியே வந்தான், அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தன.அவன் முகம் பிரேதச் சீலையால் சுற்றப்பட்டிருந்தது..(யோவான் 11:1-50)

இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டவர்களில் அனேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். இது தான் இன்றும் சபைகளில் நடைபெறுகின்றன. போதகர்களுக்கூடாக அற்புதங்கள் நடைபெறும் போது தேவன் பலரோடு பேசுகிறார், அதனால் அவர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றக்கொணடு இரட்சிக்கப் படுகிறார்கள். இதற்காவேதான் அற்புதங்கள் செய்யும் வரங்கள் ஊழியர்களுக்கு தேவனால் வழங்கப்படுகின்றன. நீங்களும் தேவனடைய வரங்ளைப் பெற்றுதேவனடைய நாமத்தை மகிமைப் படுத்துங்கள்.

இயேசு இன்னும் சிலரை உயிரோடு எழுப்பியுள்ளார். யவீருவின் மகள்.(மத் 9: 18-26, மாற்கு 5:42, லுக்கா.8: 40-56) விவையின் மகன்.(லுக்கா 7: 11-15)

6. கர்த்தர் தன்னுடைய படைப்புக்களுக்கூடாகப்பேசுகிறார். இயற்கையின் அடையாளங்கள் யாவும் பேசுகின்றன.

மனிதர்களின் பாவம் பூமியில்பெருகிய போது ,தாம் மனுனை உண்டாக்கிய தற்காக கர்த்தர் மனுஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு மிகவும் விசனமாயிருந்த்து. அப்போது கர்த்தர் மனுஷனைப் பூமியின் மேல்வைக்காமல் , மனுஷன் முதற்கொண்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப்பவைகள் சகலவற்றையும் அழித்துப்போடுவேன் என்றும் அவர்களை நான் உண்டாக்கினது வீண் என்றார்.(ஆதி. 61-8)

நோவாவுடன் தேவன் பேசினார். நீ கொப்போர் மரத்தால் உனக்கு பேழையை உண்டாக்கு, அந்தப்பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறமும் கீல் பூசு. அதை நீ பண்வேண்டிய விதமாவது பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதன் அகலம் ​ஐம்பது முழமும், அதன் உயரம் முப்பது முழமுமாய் இருக்க வேண்டும் என்றார். சகல விதமான மாம்சமான ஜீவன்களிலும் ஆணும்பெண்ணுமாக வகை ஒன்றிற்கு ஒவ்வொரு ஜோடியும் உன்னுடன் காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக்கொள் என்றார். .நோவா அப்படியேசெய்தான். (ஆதி. 6:: 11-22)

நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழைபெய்தது. அன்றயதினமே நோவாவின் குமாரரும் அவர்களது மனைவிமாரும்​ பேழைக்குள் நுழைந்தனர்.

இதனால் பேழைக்குள் இருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் அழிக்கப்பட்டனர்.

நோவா தங்கள் அனைரையும் காத்துக் கொண்டதற்காக , கர்த்தர் தங்கள்மீது காண்பித்த இரக்கத்திற் காகவும் கிருபைக்காக்கவும் நன்றிப்பலி ஏறெடுக்கின்றார். அவர் கர்த்தருக்கென்று ஒரு பல்லிபீடத்தைக் கட்டுகின்றான். கர்த்தரிடமிருந்து எந்தவித அளவுத் திட்டங்களும் கொடுக்கப்படவில்லை. பேழைக்குள் நுழையும்படி அவருக்கு விசேசித்த அழைப்புக் கொடுக்கப்பட்டது. வெளியலே வரும்படியும் அவருக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது.. கர்த்தரிடமிருந்து கிருபயைப் பெற்றவர்கள் கட்டாயம் அதற்கான நன்றியறிதலைச் செலுத்தல் வேண்டும். கட்டாயத்தின் நிமித்தமல்ல, மனப்பூர்வமாகச் செலுத்தல் வேண்டும். கர்த்தர் மன விருப்பத்துடன் கொடுக்கும் காணிக்கைகளிலும் துதிகளிலும் பிரியமாயிருக்கின்றார். அழிக்கப்பட்ட பூமிக்கு திரும்பவும் வந்தவுடன் தனக்கு ஒரு வீடுகட்வேண்டும் என்ற எண்ணமே பொதுவாக உருவாவேண்டும் மாறாக நோவா கர்த்தருக்கு ஒரு நன்றிப் பலிபீடத்தைக் கட்டினான். கர்த்தருடைய காரியங்களுக்கே நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும். கர்த்ரோடு காரியங்ளை ஆரம்பிப்பது எவ்வளவு சிறப்பானது.

நோவாவுடைய பலியைக் கர்த்தர் பிரியத்துடன் ஏற்றக்கொண்டது மட்டுமன்றி “ இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை, மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறு வயது தொடங்கிப் பொல்லாத்தாக விருக்கிறது, நான் இப்பொழுது செய்த்துபோல இனி சகல ஜீவன்ளையும் சங்கரிப்பதில்லை, பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளவும் உஷ்னமும்,கேடைகாலமும் மாரிகாலமும், இரவும் பகலும் ஒழிந்து போவதுல்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். (ஆதி. 8: 20-22)

அதுமட்டுமல்ல நோவவையும் அவன் குமாரையும் ஆசீர்வதித்து பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார்.

பின்பு நோவாவையும் அவன் குமாரையும் நோக்கி நான் உங்ளோடும் உங்களுக்குப் பின்வரும் சந்ததியோடும் , உங்ளோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துகள்முதல் , இனிப்பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம் , பறவைளோடும் , நாட்டு மிருகங்ளோடும் ,உங்களிடத்திலிருக்கிற சகல காட்டு மிருகங்ளோடும் என் உடன்படிக்கயை ஏற்படுத்துகிறேன்.

1. இனி மாம்சமாவைகள் எல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லை.
2. பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை.

இந்த உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை மேகத்தில்வைத்தேன். நான் பூமிக்குமேலாய் மழைமேகத்தை வைக்குமபோது அந்த வில்தோன்றும். அப்பொழுது என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இது எனக்கும் பூமியினமேலுள்ள மாம்சமான யாவுக்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடு சொன்னார். (ஆதி. 91-17)

வானவில்மேகத்தில் தோன்றும்போது , “ ‘நான் இனிவெள்ளத்தால் சகலரையும் அழிக்கமாட்டேன்”’ என்ற கர்த்தர் எங்களுடன் பேசுகிநார்

தேவன் தாமே சர்வ்வல்மையுள்ளவர் என்தை தன்னுடைய படைப்புக்ளைப் பார்த்தே மனிதன் அறிந்துகொள்ளக்கூடியதாக அவ்வளவு சிறப்பாகவும் நுனுக்கமாகவும் சிருஷ்டித்திருக்கிறார். இதன்மூலம் காணப்படாத தன்னடைய நித்திய வல்மயையும் தேவதத்துவத்தையும் வெளிப்படித்தியிருக்கிறார். இதனைப் பார்க்கும் யாவரும்தேவன் ஒருவர் இல்லயென்றுசொல்வே முடியாது.(றோமர.1:19-20)

வானங்கள் தேவனடைய மகிமையை வெளிப்படுத்திக் காண்பித்துக் கொணடேயிருக்கின்றது,ஆகாய விரிவு அவருடைய கரங்களின் செயற்பாட்டை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. இவை நாள்தோறும பேசுகின்றன, இரவுக்கு இரவு அறிவை வெளிப்படுத்துகின்றன அங்குபேச்சுமில்லை மொழியுமில்லை அங்கே அவைகளின் குரல் கேட்பதுமில்லை, அவற்றின் வார்த்தைகள் உலகின் கடைசிரை செல்கின்றன. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவை எல்லாவற்றிற்கூடாகவும் தேவன் எங்களுடன் பேசிக்கொணடேயிருக்கின்றார்.(சங்கீதம். 19:)

7..கர்த்தர் தனது மகனாகிய இயேசுக்கிறிஸ்த்துவுக்கூடாகப் பேசுகின்றார்.

யேயகோவா தேவன் எங்களுடன் பேசுவதற்காக அவரது திருத்துவத்தில் ஒருவராகிய இயேசுக்கிறுஸ்த்துவிற்கூடாவே மனிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமானே அரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18) யேசுக்கிறிஸ்த்து மாமிசத்தில் உலகிற்கு வந்தார். அவர் கிருபையிலும் சத்தியத்திலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமயைப்பலர் கண்டார்கள். அது பிதாவுக்கு ஏற்ற மகிமையாவே இருந்தது. (யோவான். 1:14 )

பூர்வகாலங்களில் தீர்க்கதரிசிகளுக் கூடாகப் பேசியதேவன் கடைசிநாட்களில் தன்னுடைய குமாரன் மூலமாவே பேசினார். அதுமட்டுமல்ல எங்களடைய பாவங்கள் அனைத்தையும் சிலுவையிலே தன்னுடைய திரு இரத்த்த்தைச் சிந்தி நீக்கியவராகக் சிலவையில் பலியானார். ( எபரேயர்.1:1-3)

8. கர்த்தர் தனது பரிசுத்த ஆவிக்கூடாகப்பேசுகின்றார்.

இயேசுக்கிஸ்த்து பரத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன், தனது சீடர்களோடு போசியது என்வென்றால், நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள், அப்போது உங்களுடன் என்றென்றைக்கும் கூட இருக்கும்படி பரிசுத்த ஆவியானரை பிதா உங்களுக்கு அனுப்பிவைப்பார். அவர் உங்களுனே கூடவிருந்து உங்ளைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார், நான்கூறிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுவார்,உலகம்சத்திய ஆவியானரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. ஆனால் அவர் உங்களுனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளேயிருப்பதால் நீங்கள் அரை அறிவீர்கள். நான் என்பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருப்தை அந்நாளில் அறிவீர்கள். அதாவது நாங்கள் யேசுவோடு இணைந்திருப் போமானால் பரிசுத்த ஆவியானவர் எங்களுடன் இணைந்திருந்து எங்ளை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார் .இயேசவோடும் பரிசுத்த ஆவியானரோடும் நாம்இணைந்திருப் போமானால் அவருடைய மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.(யோவான். 14:15-31.யோவான் 16:15,யோவான் 14:26,யோவான் 15:26,யோவான். 16:8, 13றோமர் .8:16.)

9. எங்களுடைய சொந்த மனச்சாட்சிக் கூடாகவே பேசுகிறார்.எங்கள் மனச்சாட்சியின் சத்தத்தை அனுதினமும் நாம் கேட்கவேண்டும்.

இயேசு ஒலிவலையிலிருந்து தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள், அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உதேசம் பண்ணினார். அப்போது விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரியை வேதபாரகரும் பரசேயரும் அவரிடத்தில்கொண்டுவந்து , அளை நடுவே நிறுத்தி :போதரே இந்த ஸ்திரி விபசாரத்தில் கையும்மெய்யுமாப் பிடிபட்டாள், இப்படிப்பட்டவர்ளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மேசே நியாயப்பிரமாணத்தில் நமக்கு கட்ளையிட்டிருக்கிறரே, நீர் என்ன சொல்கிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றம் சுமத்தும்படி காரணம் உண்டாகும்பொருட்டு இப்படிச்சொன்னார்கள், இயேசு குனிந்து விரலினால் தரையில் எழுதிக்கொணடேயிருந்தார்.

அவர்கள்ஓயாமல் அவரைக்கேட்டுக் கொண்டிர்க்கையில் அவர் நிமிந்து பார்த்து உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார். அவர்கள் அதைக்கேட்டு தங்கள் மனச்சாட்சியினால் கடிந்தகொள்ளப்பட்டு பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். (யோவான் 8:1-9)

இங்கு அவர்கள் எல்லோரும் தங்களுடைய மனச்சாட்சியினூடாக கர்த்தர் பேசினபடியால் கலைந்துசென்றார்கள். எங்களுக்கும் எங்கள் மனச்சாட்சியூடாக கர்த்தர்பேசும்போது அதற்கு நாம் கீழ்படியவேண்டும்.

நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிமக்கள்சுபாவமாய் மனச்சாட்சியின் படி யேசெய்கிபோது நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்ளே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். (றோமர் 2: 14-15)

Read more

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமை ப்படும் படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலக த்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத் துக் கொள் ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின் பற்ற க்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர் கனம்பண்ணுவார்.( John 12: 23-26 )

இங்கு யேசு தனது மரணம்நெருங்கி விட்தென்பதை அறிந்து தான் நிச்சயமாக மரணமடைவதில்லை என்பதை மறைமுகமாக தனது சீடர்களுக்குவெளிப்படுத்துகின்றார். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்தால் அது முளைப்பதற்குத் தேவையான காற்று, ஈரப்பதன், உரியவெப்பம் என்பன கிடைக்குமாயின் அந்த விதை முளைத்து தனது பெற்றோரைப் போன்ற மேனியைப் பெற்று உரிய காலத்தின் தன் பலனைக் கொடுக்கும். அது முப்பதும், அறுபதும், நூறுமாகப் பலன் கொடுக்கும்.

இப்பொழுது அந்த நிலத்தில் விழுந்த கோதுமை மணிக்கு என்ன நடந்த்து அதைத் தேடினால் கண்டுபிடிக்க முடியாது. அது உருமாற்றம் அடைந்து புதிய மரமாக ஜீவனுடன் இருப்பதைக் காணலாம்.

இவ்வாறே தனக்கும் நடக்கும் என்பதை இந்த உவமைமூலம் இயேசு மிகவும் சிறப்பாக விளக்குகின்றார். தான் மரணத்தின் மூலம் நிரந்தரமாக அழிவடைவதில்லை என்றும் குறிப்பிட்ட காலத்தில் தான் உயிரடைந்து நித்தியமாக வாழ்வேன் என்பதையும் மிகவும் சிறப்பாக அந்த உவமைமூலம் வெளிக்காட்டு கின்றார். இந்த உலகத்தில் தனது ஜீவனைப் பெரிதாக எண்ணாமல் கர்த்தரே பெரியவர் என்று எண்ணி அவருக்காக மரணத்தைத் தழுவிக் கொள்ளும் எவனும் யேசுவைப்போன்று உயிரடைய முடியும், ஆனால் உலக இச்சைகளில் தனது விருப்பம்போல் ஈடுபட்டு மரிப்பவனின் வாழ்வில் அவனால் மீண்டும் உயிரடைய முடியாது. எனக்கு ஊழியம்செய்கிறவன் என்னைப் பின்பற்றக்கடவன் என்று இயேசு கூறினார். காரணம் இயேசுவைப்போல் அவனும் ஒருநாள் மரித்தாலும் உயித்தெழுவான். நிச்சயமாக பிதாவும் அவனைக் கனப்படுத்துவார். ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத் தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தி னுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொ ன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங் களு டைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம்வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீன முள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப் பட்ட வரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணா னவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். சகோதரரே, நான் சொல் லுகிற தென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பது மில்லை. (1Cor 15:35 -50)

ஏன் இயேசுக்கிறிஸ்து மரணமடைவேண்டும்? பாவம் பூமியிலுள்ள மனிதர்களுள் புகுந்தபடியால் மனிதனை மீட்கும்படியாக கிறிஸ்து மரணமடையவேண்டியதாயிற்று.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்து மாவா னான். தேவனாகிய கர்த்தர் மனுஷனை. ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆனால் இந்த கட்டளைக்கு கீழ்படியாமல் நன்மை தீமை அறியும் கனியை புசிக்கும்படி பிசாசா னவன் வஞ்சனையாகஏவாளை ஏமாற்றினது. அதை நம்பி கர்த்தரின் கட்டளையை ஏவாள்மீறினாள். தான்மட்டும் கட்டளையை மீறினது மல்லாமல் தனது கணவனாகிய ஆதாமையும் கட்டளையை மீறும் படிசெய்தாள்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

இப்பொழுது அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டு பூமிக்குரிய கண்கள்திறக்கப்பட்டன. அதேவளை அவர்களின் பரிசுத்த அலங்கார வஸ்திரம் களையப்பட்டு விட்டதனால் தாங்கள் நிர்வா ணிகள் என்று அறிந்துகொண்டார்கள். அவர்கள் அழியாமையு டைய வர்களாய் உருவாக்கப்பட்டார்கள், ஆனான் பிசாசின் சொல்லுக்குச் செவிகொடுத்தபடியால் அழிவைப்பெற்றுக் கொண்டார்கள். இங்கு நாங் கள் அவதானிக்கவேண்டியது என்னவென்றால் ஆதாமும் ஏவாளும் வஞ்சிக்கப்பட்டார்கள். பிசாசானவன் கர்த்தருடைய பிள்ளைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே வஞ்சித்து கர்த்தரின் கட்டளை ளைமீறச் செய்து நித்திய வாழ்விலிருந்து விழச்செய்கிறான்.ஆகவே நிற்கிறேன் என்று நினைக்கிற நான் விழுந்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையுடன் கிறிஸ்துவின் ஐக்கியத்தோடு வாழவேண்டும்.


மேலேகாட்டப்பட்டபடத்தை மிகவும் அவதானமாக்க் கவனிப்போம். பிதா, கமாரன், பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய திரித்துவத்தைக் குறிக்கின்றது. பிதாவை எவராலும் காணமுடியாது, ஆனால் இயேசு என்றவடிவில் மனிதர்களுடன் அவர் உறவாடினார், பின்பு அவர் மனிதர்களுடைய பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயித்தெழுந்த கிறிஸ்து நாற்பதுநாட்கள் மனிதர்களுக்கு காட்சிகொடுத்தார், நாற்பதாம் நாள் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தான் இல்லாத இடத்தை நிரப்புவதற்காக பரிசுத்த ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார்.பத்தாவது நாள் அதாவது உயித்தெழுந்து ஐம்பதாவது நாள் பரிசுத்த ஆவியானவர் சீடர்கள்மீதும் விசுவாசிகள்மீதும் ஊற்றப்பட்டார். இவர்கள் மூவரும் ஒருவரே அதாவது இறைவனே, ஆனாலும் மூவரும் வித்தியாசமானவர்கள். இப்பொழுது யார் யார் இயேசுவைக் கிறித்து என்று ஏற்றுக் கொள்ளிறார்களோ அவர்களுடன் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்கிறார்.

இப்பொழுது ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடன் அவர்களில் காணப்பட்ட ஆவியின் செயற்பாடு செயலற்றுவிட்டது. ஆவியினால் மட்டும்தான் இறைவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடியும். பாவம்செய்தவுடன் மனிதனின் ஆவி மரித்துவிட்டது. இதனாலேயே ஆதாமுக்கும் கர்த்தருக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது. இப்பொழுது ஆதாமுடைய ஆத்துமா சரீரம் சொல்வதையை செய் கின்றது. சரீரம் மண்ணுக்க்குரியது அது மண்ணுக் குரிய செயற்பாடு களையே செய்யவிரும்பும், அதனையே ஆத்துமாசெய்யும்.

ஆவி,ஆத்தமா,சரீரம் மூன்றும் சேர்ந்தே மனிதன் என்று அழைக்கப்படும்.ஆவியும் ஆத்துமாவும் வெவ்வேறானதல்ல இரண்டும் ஒன்றானது. ஆனால் அவற்றின்செயற்பாடுகள் வித்தியாச மானவை. ஆவி செயலற்றுக் காணப்படுமானால் இறைவனுடன் தொடர்புகொள்ளமுடியாது.. சரீரத்தின் விருப்பத்தையும் ஆவியின் விருப்பத்தையும் ஆத்துமா செயற்படுத்தக்கூடியது. சரீரம் பூமிக்குரிய காரியங்களையை அதிகம் வாஞ்சிக்கும். ஆவியானது எப்பொழுதும் விண்ணுக்குரிய செயற்பாடுகளையே வாஞ்சிக்கும். எப்பொழுது சரீரம் இறைவனுக்கு விருப்பமில்லாத காரியங்களைச் செயற்படுத்த முனைகிறதோ, அவ்வேளைகளில் ஆவியானது இறைவனுக்கு விருப்பமில்லாதசெயற்பாடுகள் பாவமானது, அவற்றைச் செய்ய வேண்டாம் என்று இருதயத்தில் பேசிக் கொண்டேயிருக்கும். அந்த சத்தத்திற்கு நாம் கீழ்படியும் போதெல்லாம் பாவத்திலிருந்து தப்பிக் கொள்ளுவோம். சில சமயங்களில் சிறிய பொய் சொல்ல வேண்டி ஏற்படும் போது பொய் சொல்லுவது பாவம் என்று ஆவி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கும், ஆனாலும் தப்பித்துக் கொள் வதற்கு வேறு வழியில்லை, இது சின்னப் பொய்தானே இந்த ஒருமுறைதான் சின்னப் பொய்யைச் சொல்லலாம் என்று சரீரமானது ஆத்துமாவைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். இந்த நிலமையில் சரீரத்தின் பக்கம் ஆத்துமா சேர்ந்துகொள்ளுமாயின் அந்த பாவத்தை சரீரம்செய்து முடிக்கும். இந்த நிலமையில் ஆவியானது துக்கமடைந்த நிலையில் காணப்படும். இவ்வாறான பாவச்செயற்பாடுகளை சரீரமும் ஆத்து மாவும் செய்து கொண்டேயிருக்குமாயின் ஆவியின் செயற்பாடு தானானவே செயலற்ற நிலைக்குச் சென்று விடும். அதன்பின்பு எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதுபாவம், அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு மனச்சாட்சி எங்களுடன் பேசமாட்டாது. சரீரம் விரும்பியபடி பாவத்தில் ஜீவிக்கமுடியும்.

இந்தநிலை இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பாவம் காணப்படுவதால் இருவரும் இணைவதற்குப் பாவம் தடையாக்க் காணப்படுகிறது. இந்த இறைவனற்ற மனித வாழ்வானது அவனை நித்திய மரணத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த நிலையிலேயே உலகில் அனேகர் ஜீவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலமை ஏற்பட்டபடியினாலேயே ஆதாமும் ஏவாளும் இறைவனைவிட்டுத் தூரமாக ஜீவித்தார்கள். இந்த நிலமையில் இருந்து மீள்வதற்கு என்னவழியுண்டு? ஒரேயொருவழிதான் அதற்காக பிதாவாகிய கர்த்தர் ஏற்பாடுசெய்துள்ளார். அது தான் தன்னுடையசொந்தக்குமாரன் என்றும் பாராமல் இயேசுக் கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி பாவப்பலியாக அவருடைய திருஇரத்தைச்சிந்தி உன்னையும் என்னையும் மீட்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளார் .

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்று இயேசு கூறினார். உண்மையில் ஒரு விதையான நடப்பட்டு அதற்கு நீர் ஊற்றிவருவோமாகில் அது உரிய காலத்தில் முளைத்து வளர்ந்து பலன்கொடுக்கும். ஆனால் நாம் நாட்டிய கோதுமை மணியை எம்மால் பார்க்க முடியாது, ஆனால் அது மரிக்கவில்லை ஜீவித்துக் கொண்டேயிருக்கிறது.அது தன்னைப்போல பல நூற்றுக்கணக்கான விதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உலகத்தில் வாழும்போது இதையே நாம்செய்யவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். நீ ஜீவிக்கும் இந்தக்கொஞ்சக்காலத்தில் உனக்காக வாழாமல் இயேசுவிற்காக வாழவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். உன்னுடைய மாமிச இச்சைகளுக்காக வாழாமல் உன்னை உருவாக்க கர்த்தருக்காக வாழவாயா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக வாழவாயா? மனிதர்களுக்குச் செம்மையாகத்தோன்றுகிற பல வழிகள் உண்டு, அதன் முடிவோ மரணம். பாவத்தின் சம்பளம் மரணம்.. ஆகவே இந்த நித்திய மரணத் திற்காகச் சென்று கொண்டி ருக்கும் மனிதர்களுக்கு நித்திவாழ்வை அறிமுகப்படுத்துவாயா?

இறைவனுடைய பெரிய கட்டளை என்ன? நீங்கள் உலகம் எங்கும் சென்று யேசுவைப்பிரசங்கிப்பதல்லவா? இன்றே ஆயத்தப்படுவாயா? கர்த்தர் உன்னோடு இருந்து காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.

சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியா மையைச் சுதந்தரிப்பதுமில்லை இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்தி ருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக் கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறை வேறும் (1Cor 15 51-:55)

ஆமேன்.

Read more

நியாயப்பிரமாணம்

Posted in
by Abiramam jo

நியாயப்பிரமாணம் என்பது நன்கு ஏற்பாடுசெய்யப்பட்ட சட்ட ஒழுங்குகள் மூலம் ஒரு சமுதாயத்தை ஆட்சிசெய்தலாகும் . வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு சிறந்த நியாயப்பிரமாணங்கள் கர்த்தரினால் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றின்நோக்கம்..

1. கர்த்தரைஆராதனை செய்வதற்கும்,

2.கர்த்தருடன் தொடர்பு கொள்வதற்கும்

3.,ஒருவரோடொருவர் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும்

மோசேயின் நியாயப்பிரமாணமானது மற்ற நாட்டு நியாயப்பிரமாணங்களை விட பல விதங்களில் வித்தியாசமானது.மேசேயின் நியாயப் பிரமாணம் முலாவதாக அதன்தோற்றத்திலேயே வித்தியாசமானது. அதாவது இறைவனால் கொடுக்கப்பட்டது. இந்த நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, நீதியானது, சிறந்தது. இவைகள கர்த்தரால் சீனாய் மலையில்வைத்து இஸ்ரவேல் மக்களுக்காக் கொடுக் கப்பட்டவையாகும். இந்த நியாயப்பிரமாணங்கள் மக்களை ஒன்றிணைத்தது, அவர்கள் இறைவனால் ஆதரிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நியாயப்பிமாணங்கள் உலகமயமானது, இந்த நியாயப்பிரமாணமானது கர்த்தரின் அன்பின் வெளிப்பாடாகும். இந்த உடன்படிக்கையை கைக்கொள்பவர்கள் யாவரும் கர்த்தருடைய சொந்த ஜனமாவார்கள்.( யாத். 19:5-6)

இஸ்ரவேலில் செய்யப்படும் சகல குற்றங்களும் கர்த்தருக்கு விரோதமான வையாகும்.(1.சாமு. 12: 9-10) அவர் தனது பிள்ளைகள் தன்னையே நேசிக்கவும் சேவிக்கவும் வேண்டுமென்று விரும்புகிறார்.( ஆமோஸ் 5: 21-24) தன்னுடைய நியாய ப்பிரமாணங்களை மீறுபவர்களை அவர் நியாயாதிபதியாகவிருந்து தண்டித்து ஒழுங்குபடுத்துவார்.( யாத். 22: 21-24, உபாக. 10: 18, 19:17) அந்ததேசத்தார் அல்லது அந்த சமூகத்தாரே நியாயப்பிரமாணத்தை நடப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களாகும்.(உபா. 13: 6-10, 17:7, எண் 15: 32-36)

கர்த்தரின் நியாயப்பிரமாணமானது ஏனைய நாடுகளில் காணப்படும் நியாயப்பிரமாணங்களைப் போலல்லாது முற்றிலும் வித்தியாசமானது. இது மனித உயிர்கள் மிகவும் விலையேறப்பெற்றவை என்பதைவெளிக் காட்டுகின்றன , ஏனெனில் மனித உயிர்கள் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். வேதாகமத்தின் நியாயப்பிரமாணமானது மிகவும் நீதியும் இரக்கமும்கொண்டவையாகும். இவை மிருகத்தனமற்றவையும் கெடுதலற்றவையுமாகும். கர்த்தருடைய பார்வையில் சகலரும் சமமானவர்களே.

மேசேயின் நியாயப்பிரமாணத்தில் காணப்படும் “கண்ணுக்கு கண்” என்பது கொடுமையானதும் இரக்கமற்றதுமல்ல. ஆனால் நியாப்பிரமாணத்தில் காணப்படும் சமமான சட்டமாகும்.( யாத். 21:24). ஒவ்வொரு குற்றவாளியும் கூலி கொடுத்தேயாகவேண்டும்.( எண். 35:31). பாகால் வணக்கமுள்ள தேசங்களில் பணக்காரர் தங்கள் குற்றங்களுக்காக பணத்தை தண்டமாகக் கொடுத்து தப்பமுடியும். கர்தரின் நியாயப்பிரமாணமானது விதவைகள், தகப்பனற்ற பிள்ளைகள், அடிமைகள், அந்நியன் ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றது.( யாத்.21:2, 20-21: , 22:21-23)

லேவியராகமம் 17-26 ல் எந்விதமான சமயச்சடங்குகளுக்கான கர்த்தருடைய வழிகாட்டலும் இல்லாதபோதும் பல கல்விமான்கள் இதனை “ பரிசுத்த சட்டதொகுப்பு” எனக் கூறுகிறார்கள்”, ஆனால் இந்த அதிகாரங்கள் தேவாலயம் பற்றியதும்,பொது ஆராதனை பற்றியதுமானதும், சமயச்சடங்குகள், நன்நெறிகள் சார்ந்த குறிப்புகளையும் தன்னைப்போல் அயலவனை நேசிப்பதுப்றியுமே கொண்டுள்ளன. (லேவி. 19:18). இஸ்ரவேல் தேசத்தார் மற்ற தேசத்தாரை விட்டுப் பிரிந்திருக் வேண்டும் என்றும் கூறுகின்றது, அத்துடன் கர்த்தர் பரிசுத்தமானவராகையால் பல சட்டத் தொகுப்புக்கள் பாகால் வணக்கத்தைத் தடைசெய்கின்றது.(21:8)

உபாகமப்புத்தகம் சில வேளைகளில் உபாகமச் சட்டத் தொகுப்பு என அழைக்கப்படுகிறது. இதில் நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. என்பது அடங்கியுள்ளது.( உபாக. 6:5) பத்துக் கற்பனையின் இரண்டாம் பதிவுபோல் இது காணப்படுகிறது (உபா. 5)

வேதாகத்திலுள்ள சட்டத் தெகுப்புக்கள் மனிதர்களினால் இயற்றப்பட்ட சட்டத் தொகுப்புக்களிலும்பார்க்க மேலானது. கர்த்தர் மக்களிடம் என்னத்தை எதிர்பார்க்கிறார் என்பதையே வேதாகமச் சட்டங்கள் கூறுகின்றன. இவை கர்த்தருடைய தன்மைகளை வெளிக்காட்டும் நித்திய நன்நெறிக் கொள்கையில் தங்கியுள்ளது. ஆகவேதான் (பத்துக்கறபனை) வேதாகம நியாயப்பிரமாணம் என்பது நன்நெறிச் சட்டத்தின் சுருக்கமாகும். இது உலகிற்கான அடிப்படை நன்நெறிக் கொள்கையாகும்.

குடியியல் சட்டம் என்பது ஐந்து ஆகமங்களிலும் கூறப்பட்ட சட்டங்களை கொண்டுள்ளது. இவை குடியியல், சமுதாய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது. அன்றுதொடக்கம் இன்றுவரை சட்டங்களை வழங்குபவரும் ஆளுகைசெய்பவரும் கர்த்தரே, எல்லா சட்டங்களும் அடிப்படையில் சமயஒழுக்கம் சார்ந்தவைகளே.பழைய ஏற்பாட்டில் எட்டு வகையான குடியியல் சட்டங்கள் இருக்கின்றன.

1. தலைவரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்.

2. இராணுவத்தை ஒழங்குபடுத்தும் சட்டங்கள்.

3. குற்றவாளிகளுக்கு மதிப்பழிக்கும் சட்டங்கள்.

4. சொத்துக்களுக்கு எதிராகச்செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.

5. கருணைகாட்டும்செயல்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.

6. தனிப்பட்டதும் குடும்ப உரிமைகள் பற்றியதுமான சட்டங்கள்.

7. சொத்துக்களுக்கான உரிமைகள் பற்றிய சட்டங்கள்.

8. ஏனய சமூகப்பழக்கங்கள் ஒழுங்குபடுத்தல் சம்பந்தமான சட்டங்கள்.

1. தலைவரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்.:- இஸ்ரவேல்மக்கள் தலைவர்கள் சுதந்திரமாகவும் குற்றமற்றும் தைரியமாகச் செயற்படுவதற்காக பல வித்தியாசமான சட்டங்கள் இவ்வகையான குடியியல் சட்டத்திற்றகாக வரையப்பட்டுள்ளன.

2. சட்டத்திற்கு விலக்கப்பட்டவை:- பல வகையான மக்கள் வாக்களிப்பதற்கோ அல்லது அலுவலகத்தில் சேவைசெய்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளார். அவர்களாவன

1. வலது குறைந்தோர்.

2. விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

3. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது

4. மேவாப்பியர், அம்மோனியர் போன்று விலக்கப்பட்ட அந்நியர்.( உபா. 23:1-3) இவ் வகையான சட்டகளால் இஸ்ரவேலர்களை கர்த்தருக்குமுன்பாக பூரணமுள்ளவர்களும் சுத்தமுள்ளவர்களுமாக இருப்பதற்கு படிப்பிக்கின்றார்.

3. இராஜாக்களுக்கான சட்டங்கள்.:- அனேக வருடங்களுக்குமுன் இஸ்ரவேலர்களுக்கு ராஜா இருந்தார். இஸ்ரவேலருக்காக ராஜா நியமிக்கப்படுவதானால் , அவர் கர்த்தரால் கொடுக்கப்படும் சட்டங்கள் யாவற்றையும் கைக்கொள்ளல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர் உண்மையான இஸ்ரவேலனாக இருத்தல்வேண்டும் அத்துடன் அவர் கர்த்தரை மட்டும் நம்பவேண்டும். பல மனைவிகள் உடையவராக இருத்தல் கூடாத..( உபாக. 17: 14-20) நியாயாதிகளின் புத்தகத்தகம் தற்காலிக இராணுவ தலைவராக செயற்படுகின்றது. சிலசெயற்பாடுகள் தற்காலிக நியாயாதிபதியாகவும் செற்படுகின்றது. இஸ்ரவேல் ராஜாக்கள் இந்த நியாயாதிபதிகளைவிட வித்தியாசமானவர்கள்.

4. நியாயாதிபதிகளுக்கான சட்டங்கள்:- நியாயாதிபதிகளில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஆசாரியர்களும் ஆசாரியர்கள்அல்லாதவர்களும் (மூப்பர்கள்). ஆசாரியர்கள் சமயசம்பந்தமான வழக்குகளை விசாரிப்பார்கள், மூப்பர்கள் குடியியல் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பார்கள்.(உபா. 17: 8-13, 2 நாளா. 19: 8, 11) நியாயாதிபதிகள் மூப்பர் என்றும் அழைக்கப்படுவர் இவர்கள் வீட்டுத் தலைவர்களால் தெரிவு செய்யப்படுவார்கள். (யாத். 18: 13-26)

5. நீதிமன்றம் சார்ந்த சட்டங்கள்.:- கர்த்தர் இஸ்ரவேலர்களை இவ்வகையான சட்ட ஒழுங்கு முறைக்கான ஒழுங்கு முறைகளை நியாயாதிபதிகளின் கட்டிடங்களில் ஒழுங்கு படுத்தல் வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டார்.( யாத். 18:21-22, உபா. 1:15). குறிந்த விடயங்களை குறிந்த நியாயாதிபதிகளின் சபை தீர்மானிக்கலாம்., அத்துடன் பாரிய விடயங்களை பெரிய சபை நியாயந்தீர்க்கலாம். (உபா. 16:18). நியாயாதிபதிகளின் சபைகளால் தீர்மானிக்க முடியாதவற்றை உயர்நிதிமன்றத்தில் பிரதான நியாயாதிபதி விசாரிப்பார்.( 2.நாளா. 19: 10-11). உயர்நீதிமன்றத்தில் கர்தரே நியாயாதிபதியாயிருப்பார்.( யாத்.22: 21-24, உபா. 10:18)

நியாயாதிபதிகள் பணக்காரர் மத்தியிலும், ஏழைகள் மத்தயிலும், விதவைகள்மத்தியிலும், அந்நியர் மத்தியிலும், ஏனய உதவியற்றோர் மத்தியிலும் பாரபட்சமின்றி நடத்தல்வேண்டும்.( 23: 6-9). அதேநேரம் சாட்சிகளை நன்றாகக்கேட்க வேண்டும், சான்றுகளை ஆராயவேண்டும், அத்துடன் கரத்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தில் வெளிப்படுத்திய பிரமாணங்களுக்கமைய தீர்மானங்களை மேற்கொள்ளல் வேண்டும்.

6. சாட்சிகளுக்கான சட்டங்கள்:- சாட்சிகள் கர்த்தரின் நாமத்தில் உண்மைகளைச் சொல்லவேண்டும்.(லேவி.19:16) அப்படி அவர்கள் உண்மை சொல்லத் தவறும்பட்சத்தில் கர்த்தராலே நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவர்களுடைய ஏமாற்றல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த வழக்கிற்குரிய சகல குற்றங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.( யாத். 23: 1-3, உபா. 19:15-19).பெரிய குற்றங்களுக்கான தீர்ப்புச் சொல்லுவதற்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் விசாரிக்கப்படல் வேண்டும்.( எண். 35:30). உண்மையில் ஒரு சாட்சியை மட்டும்வைத்துக்கொண்டு யாரையும் குற்றம்சுத்தி தீர்ப்பளிக்கமுடியாது. எழுத்து மூலமான சான்றுகள் அல்லது வேறுசாட்சிகள் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளமுடியும்.(உபா. 17:6, 19:18)

7. சட்டத்தைச் செயற்படுத்துவதற்கான சட்டங்கள்:- நீதிமன்றத்தீர்ப்புக்கு மறுப்புத் தெரிவித்தால் அவன் சாகக் கடவன்.( உபா. 17:12-13)பழைய இஸ்ரவேல்மக்கள் நியாயாதிபதிகளாகவும் தலைவர்களாகவுமிருந்தார்கள். .( உபா. 16:18) வழக்காமாக ஒரு வேலையைச் செய்துமுடிக்கும் நடவடிக்கைகள் அந்நாட்டு பிரஜைகளின்கைகளிலேயே விடப்பட்டிருந்த்து.(உபா. 13: 9-10, 15:11)

8. அடைக்கலப்பட்டணங்களுக்கான சட்டங்கள்: :- அடைக்கலப் பட்டணத்திற்குள் நுழைவதற்கான அனுமதி நியாயாதிபதிகளிடமேயுண்டு. தவறுதலாக மனித கொலைகள் செய்தவர்கள் இந்த நகரங்களுக்குள் பாதுகாப்பிற்காக ஓடித் தங்களைக் காத்துக் கொள்வார்கள். தேசத்தின் பிரதான ஆசாரியன் மரிக்கும்போது, இவ்வாறு அடைக்கலம்கோரியவர்கள் எந்தவித தண்டனையுமின்றி தங்கள் வீட்டிற்குப்போகமுடியும்.(யாத். 21:12-14) உபாகமம்.19: 1-13) இவ்வகையான நகரங்களுக்குச் செல்வதற்கான பாதைகளை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவேண்டியது இஸ்ரவேலினது பொறுப்பாகும், தப்பி ஓடுகிறவர்கள் பழிவாங்கத் தேடு கிறவர்களின் கையினின்று பாதுகாக்கப்படுவார்கள்..

9. தீர்க்க தரிசிகளுக்காக சட்டங்கள்:- விக்கிரக வணக்கங்களை நியாயப்பிரமாணம் கண்டிப்பாகத் தடைசெய்கிறது அத்துடன் விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்துபவர்கள் மரணத்திற்கு உட்படுத்தப் படுவார்கள்.ஒரு உண்மையான தீர்க்கதரிசியை அறிவது அவரினால் மேற்கொள்ளப்படும் அற்புதங்களினால் அல்ல ஆனால் கர்த்தருக்கு உண்மையாயிருப்பதும் அவருடைய வெளிப்படுத்தலுக்கு உண்மையா யிருப்பதுவுமேயாகும். (Deut 18:20 -22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறை வேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.) மற்றப்படி பார்க்கும்போது உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்படிந்தேயாகவேண்டும். அவர்கள் கீழ்படியாமல் போகும்பட்சத்தில் , கர்த்தர் அந்த மக்களைத்தண்டிபார்.

10. இராணுவத்தை நிர்வகிப்பதற்கான சட்டங்கள்.:- இராணுவத்தை நிர்வகித்தல் குடியியல் சட்டத்தின் இரண்டாவது வகையைச் சார்ந்ததாகும். பாலஸ்தீனர்கள் யாவரும் கர்த்தருக்குச் சொந்தமானவர்களாவர். எல்லைகளைப்பாதுகாப்பதற்காக தங்கள் எல்லைகளுக்குள் போர்செய்வதற்கான கட்டளைகள் கொடுக்கப் பட்டவர்க ளாகும். எல்லா 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( எண். 1: 21-43) 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விலக்களிப்பு உண்டு.(எண். 4:3,23) சிறிய யுத்தங்கள் நடைபெறும்போது திருவுளச்சீட்டுமூலம் வீர்ர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். (எண். 31: 3-6) இராஜாவுக்குப் பாதுகாப்பாக சிறிய தொகை இராணுவமே அமர்த்தப்படும். எதிரகளின் தாக்குதல்களின்போது பாதுகாப்பவராக கர்த்தரே அவர்களுக்காகச் செயற்பட்டார்.( உபாக. 23: 9-14)

11. சில பிரஜைகள் இராவத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாகும்.:- ஆசாரியர்களும் லேவியர்களும் ( எண்.1 48-49) புதிதாக்கட்டியவீட்டை பிரதிஸ்டை செய்யாமலிருப்பவர்களும், (உபா.20:5) வயல்நிலத்தில் அறுவடை செய்து முடிக்கா தவனும், திரட்சைத்தோட்டத்தில் அறுவடைசெய்து முடிக்காதவனும்(உபா.: 20:6) ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன். (Deut 20:7) யுத்த அழைப்பிற்கு ஒருவருடத்திற்குள் திருமாகிய எவனும்(உபா: 24:5)

12. எல்லா யுத்தங்களும் பரிசுத்த யுத்தமாகும்— அதாவது, கர்த்தரின் தலைமையில் நடக்கும் யுத்தங்களாகும். ஆகவேதான் தன்னுடைய இராணுவத்திற்காக கர்த்தரே முன்னின்று யுத்தம் செய்து பாதுகாப்பார்.( உபா. 20:1-4) அத்துடன் எதிரிகள்மீது இயற்கை அழிவுகளையும் உண்டாக்குவார்.(யோசுவா 10:11, 24:7) கர்த்தருடைய பாதுகாப்புத் தேவையாகவிருந்தால் நாம் பாவத்திலிருந்து விலகியிருக்க வேண்டும், கர்த்தருக்கு பிரதிஸ்டை செய்தவர்களாயிருத்தல் வேண்டும், அத்துடன் போர்முனையில் அவருடைய வழிநடத்தலைப் பின்பற்ற வேண்டும்.( உபா.23:9-14). கர்த்தரே பிரதான கட்டளையிடும் அதிகாரியாக விருக்கிறார், அத்துடன் வெற்றிபெற்றதற்கான சகல மகிமையும் அவருக்கே உரியதாகும்.( எண். 10:9-10)பாலஸ்தீனத்திற்குள் காணப்படும் இஸ்ரவேலர்களல்லாதவர்கள் யாவரும் கொலை செய்யப்படல் வேண்டும். அத்துடன் அவர்களின் உடமைகள் ,சொத்துக்கள் யாவும் கர்த்தருக்குக் கொடுக்கப்படல் வேண்டும்.( உபா. 20: 16-18, 2:34, 3:6). அதாவது, அவர்கள் தங்கள் எல்லைகளைப் பரிசுத்தம் பண்ணக்கடவர்கள், அத்துடன் கானானிய விக்கிரகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளக்கடவர்கள். பாலஸ்தீனத்திற்கு வெளியே இஸ்ரவேலர்கள் யுத்தம் செய்யும் போது , யுத்ததாக்குதலுக்கு உட்படுத்தப்படும் நகரத்தை தாக்குவதற்கு முன்னாகா சமாதானத்திற்காக ஒப்புக் கொடுத்தல் வேண்டும். அவர்கள் சமதானத்தை ஏற்கமறுத்தால் நீ அவர்களோடு யுத்தம்செய்யலாம். யுத்தத்தில் நீவெற்றியடையும் பொது சகல பிரஜைகளும் சொத்துக்களும் சட்டப்படி அடிமைகளாக்கப்படுவார்கள்.( உபா. 20: 10-15நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.Deut 20:11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ் செய்யக்கடவர்கள்.(Deut 20:12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,Deut 20:13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,Deut 20:14 ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.(Deut 20:15 இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.)

13 குற்றவாளிகளுக்கு மதிப்பளிப்பதற்கான சட்டம்.:- விஷேசித்த சட்டவிரோத குற்றங்கள் குடியியல் சட்டத்தின் மூன்றாவது பிரில் அடங்குகின்றது. சட்டவிரோத குற்றம் என்றால் என்னவென்று கர்த்தர் நியாயப்பிரமாணத்தில் சிறப்பாக வகையறுத்துக் கூறுகின்றார். அவற்றுக்கு சரியான தண்டனைகள் என்னவென்றும் கூறப்பட்டுள்ளன. குற்றங்கள்சகலதும் பாவமாகும். குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளும் மாறுபடும்.இஸ்ரவேலர்கள் குற்றவாளி களுக்கு அதிகபட்சதண்டனை கொடுப்பதை கர்த்தர் தடைசெய்கிறார்.(உபா. 25:1-3) (Deut 25:1 மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.

(Deut 25:2 குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.(Deut 25:3 அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்.

கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள்.:-கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி, வாழ்நாள்முழுவதும் கடவுள்பயமுள்ள வாழ்வாகவே இருத்தல் வேண்டும், ஆனால் சில குற்றங்கள் கர்த்தருடைய ஆராதகைமுறமைக்கு விரோதமாக்க் காணப்படுகின்றன்)

கீழே கானப்படும்செயற்பாடுகள் கர்த்தருக்கு விரோதமானவைகளாகும்

கர்த்தரைத்தவிர வேறு தேவர்களை ஆராதித்தல். (யாத். 22:20, 34:14), (உபாக. 13: 1-8)
மாயவித்தை அல்லது பில்லி சூத்திரங்கள் மூலம் மக்களை கர்த்தரைவிட்டு பின்வாங்கச் செய்தல். ( யாத் 22: 18, உபா. 18: 9-14)

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.

இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.

அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன். ((Lev. 18:21; 20:2–5);

கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும். ((Lev 24:16 )
உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (Deut 18:18
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். . (Deut 18:19
சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். (Deut 18:20
நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன். (Exod 35:2
ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் . (Exod 35:3 [தமிழ்])

சமூகத்திற்கு எதிரான குற்றங்கள்- சில குற்றச்ச்செயல்கள் சமூகத்தை முழுவதுமாகப் பாதிக்கின்றது. இலஞ்சம் வாங்குவதன்மூலம் நீதியைப்புரட்டாதிருப்பாயாக. (யாத். 23: 1-7, உபாகம்ம் 19:16-21) நீதிபதிகள் யாவரையும் சமனாக நடத்தவேண்டும் என்றுகட்டளையிடப்பட்டுள்ளார்கள்.

உடலுறவு நன்னடத்தைக்கு எதிரான குற்றங்கள்:- வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள நியாயப் பிரமாணமானது உடலுறவு நன்னடத்தையைப் பாதுகாத்து குடும்ப வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்துகிறது. இருவர் உடலுறவில் இணைவதன்மூலம் ஒரே மாமிசமாகிறார்கள்,

1. மணமாகாமல் ஆண் பெண்கலவி:- இஸ்றவேலில் ஆண்பெண் உடலுறவில் இணைதல் மிகவும் பரிசுத்தமானது. புதிதாக திருமணம் செய்தபெண் தனது கணவனைத் தவிர்ந்த வேறு ஆணுடன் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டால், அது நிரூபிக்கப்பட்டால் அவள் சாகடிக்கபடல் வேண்டும். அந்தக்குற்றச் சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால், அவளுடைய கணவன் பெரும் தொகைப் பணத்தை குற்றமாக்க் கட்டி, அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ( உபா. 22:13-21)

2. விபச்சாரம்:- கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி விபச்சாரம் பயங்கரமான குற்றமாகும், சிலவேளைகளில் இந்தக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்படவேண்டும். (லேவி. 20: 10-12, உபாக. 22:22) திருமணம் நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண் நியாயப்பிரமாணத்தினால் பாதுகாக்கபடுகின்றாள். நிச்சயிக்கப் படாதவேறு மனிதருடன் உடலுறவில் ஈடுபட்டால் இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள். (உபா. 22: 23-24)

3. ஓரினச் சேர்க்கை :- மிருகத்துடன் புணருதல், அல்லது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுதல் கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. இது கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி மரணத்திற்கேதுவானது. (லேவி: 20:13)

4. வேசித்தனம்.:-வேசித்தனத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் கொலை செய்யப்படக்கடவர்கள்.( ஆதி 38: 24, லேவி. 19: 29, 21:9)

5. தடைவிதிக்கப்பட்ட உறவினருக்கிடையில் ஏற்படும் தகாத கலவி:- ஒருவரின் கிட்டிய உறவினருடன் உடலுறவில் இணைதல் மரணத்திற்கேதுவானது. (லேவி. 20: 11-14)

6. மிருகப்புணர்ச்சி:- மிருகங்களுடன் புணருதல் மரணதண்டனைக்குரியது. (யாத். 22: 19,லேவி 18: 23, உபா. 27: 21)

7. உடைமாறி அணிதல்:- பால்களுக்கிடையிலான வித்தியாசம் அவர்கள் அணியும் உடையினால் அடையாளம்காட்டப்படும். இருந்தும் எதிர்பால் உடைகளை அணிதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

8. தனிப்பட்ட மனிதருக்கு எதிரான குற்றம்:- மற்றவர்களுக்கு எதிரான சட்டவிரோதசெயல்கள் பயங்கரமான குற்றச்செயலாக்க் கருதப்படும். கிழ்காணப்படும் குற்றங்கள் உதாரணமாக்க் காட்ப்படுகின்றன

கொலைசெய்தல்:- மனித உயிரை திட்டமிட்டுக் கொலைசெய்தல் கொலைத் தண்டனைக்குரிய குற்றமாகும். எதிர்பாராது கொலை செய்தல், யுத்த்த்தில் கொலை செய்தல், சட்டப்படி கொலைத் தண்டனையை நிறைவேற்றல் என்பன சட்டவிரோத மனித கொலையாக்க் கருதப்படமாட்டா.( யாத். 21: 12-14, எண். 35: 14-34). ஆறாவது கட்டளை “ கொலை செய்யாதிருப்பாயாக” என்பதாகும். இயேசு இதனை மேலும் சிறப்பாக விளக்கி ​ தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளாதே என்றும், வீணனென்றும் , மூடனே என்றும் சொல்லவேண்டா ம் எனக் கூறியுள்ளார். ( மத் 5: 21-22)
தாக்குதல் செய்தல்:- ஒருவரோடொருவர் சமாதானமாக வாழும்படி கர்த்தரின் நியாயப்பிரமாணம் கூறுகின்றது. ஆனால் அவ்வாறான குற்றங்கள் ஏற்படுகின்றன, தாக்குதல் சம்பந்தமான சட்டங்களை கர்த்தர் ஏற்படுத்தியுள்ளார். ஒருவரைக் காயப்படுத்தி அவரது நேரத்தை வீணடித்தால், காயப்படுத்தியவர் அதற்குரிய பணத்தை கட்டவேண்டும். அவ்வாற வழக்குகளில் நீதிமன்றம் அதற்குரிய குற்றப் பணத்தைத் தீர்மானிக்கும். ( யாத்.21: 18-19)

காயப்பட்டவர் அடிமையாயிருந்தால், அவனுக்கு அங்கக் குறைபாடு ஏற்பட்டால்,. குற்றம்புரிந்தவருக்கு பெரும் பணச் செலவு ஏற்புடும. அல்லது அந்த அடிமை இறந்தால், அக்குற்றத்தைப் புரிந்தவரும் சாகவேண்டும். அந்த அடிமை பிழைத்திருந்து அங்கக் குறைவு ஏற்படாமலிருந்தால், அக்குற்றம் புரிந்தவருக்கு தண்டனையில்லை.( யாத். 21: 20-21, 26-27)

மகளோ அல்லது மகனோ பெற்றோரை தாக்கித்துன்ப்பபடுத்தினால் தாக்கியவர் கொலை செய்யப்படக்கடவர். ( யாத் 21: 15) புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம். (உபா. 25:11–12).

உரியகாலத்திற்குமுன் பிள்ளை பெறுதல்:- ஒரு சண்டையின் போது ஒருபெண் உரியகாலத்திற்குமுன் பிள்ளை பெறுவதோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ, அந்தப்பெண்ணை அடித்தவர் மரணத்திற்குள்ளாக்கப்படுவார். இந்த சண்டையின் காரணமாக குறைப்பிரவசம் ஏற்படுமாயின் அற்காக குற்ப்பணத்தை நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் கட்டல்வேண்டும்.

பலவந்தமாய் கற்பழித்தல் :- திருமணஉறுதிசெய்யப்பட்ட பெண்ணைக் பலவந்தமாய் கற்பழிக்கும் ஒரு நபர் சாகடிக்கப்படக்கடவன். ( உபா. 22: 25—27). ஒருவருக்கும் நியமிக்கப்படாத பெண்ணைக் பலவந்தம் பண்ணிக் கற்பழித்தால் அவன் அதிக பணம்செலவுசெய்யவேண்டும் அத்துடன் திருமண ஏற்பாடும் செய்தல் வேண்டும். தகப்பன் திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்துப் பணத்தைத் தான்வைத்துக் கொள்ள முடியும். அவர் சம்மதம் தெரிவிப்பாராகில் பலவந்தம்பண்ணினவர் திருமணம்செய்யமுடியும், ஆனால் விவாகரத்துக் கோரமுடியாது.( யாத். 22: 16-17, உபா.22.: 28—29). கற்பழிக்கப்பட்ட பெண் நியமிக்கப்பட்ட அடிமையாயிருந்தால், அவளைச் சேர்த்து வைக்கக் கூடாது. அதேநேரம் கற்பழித்தவர் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்படமாட்டார். ஆனல் கர்த்தருக்கு முன்பாகசெய்த பாவத்திற்காக குற்றநிவாரணபலி செலுத்தல் வேண்டும்.

கொடுமைப்படுத்தல்.:-தங்கள்உரிமைகளைச் செயற்படுத்த முடியாமலிருப் பவர்களைக் கர்த்தர் பாதுகாக்கின்றார். பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டவேண்டாம். குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் . உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக .யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக(Ex. 22:21–24; Lev. 19:14, 33; Deut. 24:14; 27:18–19).

பலவந்தமாய்க்கடத்திச் செல்லல்.:- ஒரு மனிதனைக் கடத்திச்சென்று விற்பனைசெய்தல் அல்லது அவனை அடிமையாகப்பாவிப்பது கடும் குற்றமாகும்.( உபா. 24:7) இந்தத் தடை அந்நியருக்கும் பொருந்தும்.( யாத். 22: 21-24) குருடருக்கும் செவிடருக்கும் பொருத்தமாகும். (லேவி. 19:14) சகல ஜனங்களுக்கும் பொருத்தமானது. ( உபா. 27: 18-19, )

சொத்துக்களுக்கு எதிராகச்செய்யப்படும் குற்றச் செயல்கள்:- வேதாகமச் சட்டமானது மற்றய நாட்டுச் சட்டங்களைப் போன்றதல்ல, சொத்துக்களைவிட மனித உயிர்கள் பெறுமதிமிக்கவை என கருதுகின்றது. ஆனால் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் அவற்றை களவு,மோசடி என்பவற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் அனுமதிக்கின்றது. கீழே கூறப்படும் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன.

அச்சுறித்திப்பணம்பறித்தலும் கடன்மோசடி செய்தலும்.:- இவ்வாறான குற்றங்களை கர்த்தரின் நியாயப்பிரமாணத்தில் களவகவே கருதப்படுகின்றது. இவற்றிற்கு அதிகபட்ச தண்டனை குற்றமாகக் கொடுக்கப்படுகின்றது. (Ex. 22:1–3; Lev. 6:1–7).

நிறையிலும் படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.:-ஆதிகால இஸ்றவேலர்கள் பணத்திற்கு வியாபாரம் செய்யவில்லை, மாறாக கொடுக்கல்வாங்கல்கள் விலைஉயர்ந்த உலோகங்கள் நிறுத்துக் கொடுக்கப்பட்டன. தவறான அளவுகளைப்பாவித்து ஏமாற்றுவதைக் கர்த்தர் தடைசெய்கின்றார், அதனைக்களவாகவே கருதி அதற்குத் தண்டனை கொடுக்கப்படுகின்றது. (Deut. 25:13–16, Lev. 19:35–36).

தொலைந்த மிருகங்கள்.- பழைய இஸ்ரவேலர்களின் நாட்களில் “ கண்டுபிடிப்போர், பாதுகாப்போர்” அலைந்துதிரந்து காணாமல்போகும் மிருகங்கள் உரிமையாளர்களிடம் திரும்பவும் ஒப்படைத்தல் வேண்டும். உன்னுடைய எதிராளியின் எருது அல்லது கழுதை தொலைந்து போனதை நீ கண்டால் அவற்றை மீண்டும் அவனிடம் கொண்டுவந்துசேர்க்க வேண்டும்.. ,” (Ex. 23:4–5; Deut. 22:1–4).

எல்லைகள்:- நலங்கள் அதன் அளவுகளுக்கேற்ப எல்லைக்குறியிடப்பட்டு அடையாளப்படுத்தப்படும். இந்த எல்லைக்குறிகளை அகற்றுதல் அல்லது மாற்றுதல் கர்த்தரின் சாபத்திற்கேதுவானது. இது அயலவனிடம் களவுசெய்தலுக்கு ஒப்பானது அத்துடன் பெரிய நிலச் சொந்தக்கார்ராகிய கர்த்தருக்கு விரோதமான குற்றச் செயலாகும். (Deut. 19:14; 27:17).

கருணை நடக்கைகள் சார்பான நியாயப்பிரமாணங்கள்.:- கர்த்தருடைய நியாயப்பிரமாணமானது பாதுகாப்பற்ற மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பாதுகாப்பளிக்கின்றது.

மிருகங்களின் பாதுகாப்பு:- இவ்வகையான சட்டங்கள் சூழலுக்குரிய சட்டங்களாகும். உதாரணமாக, 7ம் வருடத்தில் இஸ்ரவேலர்கள் நிலத்தைப் பயிரிட வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எதாவது கனிமரமோ அல்லது தானி யங்களோ வளர்ந்திருந்தால் அவற்றை வறுமைப்பட்டவர்களுக்காகவும், மிருகங் களுக்காகவும் விடப்படல்வேண்டும்.இவ்வகையான செயற்பாடுகள் சுழற்சிப் பயிர்செய்கையை ஊக்குலிக்கின்றது.(Ex. 23:11–12; Lev. 25:5–7). வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது. தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. (Deut. 25:4).மிருகங்கள்மீது அதிகபாரம் சுமத்த க்கூடாது அத்துடன் அவற்றை அடித்துத் துன்புறுத்தக்கூடாது. அவைகளும் சபாத் நாளில் ஓய்வெடுக்கவேண்டும். (Ex. 20:8–11; 23:12; Deut. 22:1–4).

மனிதவர்க்கத்திற்கான பாதுகாப்பு:- விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; (Ex. 22:21–25).அவர்களின் சுய கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக தொழில் வாய்ப்புக்கள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்குரிய சம்பளம் சரியாக்க் கொடுக்க வேண்டும்.( (Deut. 24:14–15, 19–22).

உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.(Lev. 25:35–37). வயதானவர்கள் கனம்பண்ணப்படல் வேண்டும். (Lev. 19:32). பிரயாணத்திலிருப்பவர்கள் தோட்டத்திற்குள் சென்று தாங்கள் சாப்பிடக்கூடியவற்றை எடுத்துக் கொள்ளலாம் மேலதிகமாக எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. (Deut. 23:24–25).

தனியாளுக்குரியதும் குடும்பத்துக்குரியதுமான சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் இதுமிகவும் பரந்த அளவைக் கொண்டுள்ளது. கீழ்குறிப்பிடப்படும் விடயங்கள் இவற்றில் அடங்கும்.

பெற்றோரும் பிள்ளைகளும்:-பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உடுத்தி உணவூட்டிப் பராமரித்தல் வேண்டும்.தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்தில் திறம்பட வளர்த்தல் வேண்டும். (Deut. 6:6–7).

தகப்பனுக்குரியகடமைகள்—- பிள்ளைகளை விருத்தசேதனம் செய்தல், (Gen. 12–13) முதற்பேறானவைகளை கர்த்தரிடமிருந்து மீட்டுக் கொள்ளல்(எண். 18: 15-16) பிள்ளைகளுக்கு நல்ல திருமணம் செய்து கொடுத்தல் ( ஆதி 24: 4) பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியும்படி கட்டளையிடப் பட்டுள்ளார்கள்.( யாத். 20:12). பெற்றோரை அடித்தல், சபித்தல், என்ப மரணதண்டனைக்குரிய குற்றமாகும். (மதுபானம் அருந்துதல், பிடிவாதம் செய்தல்,) (Ex. 21:15, 17; Deut. 21:18–21). சிறுபிள்ளைகள் பெற்றோரின் பராமரிப்பிலிருக்கின்றபடியால் அவர்கள் எந்தப் பொருத்தனையும் செய்யமுடியாது.. திருமணம் செய்யாத பெண்பிள்ளைகளும் தகப்பனாரின் சம்மதமின்றி பொருத்தனைகளை செய்யமுடியாது. ( எண். 30: 3-5)

திருமணம்:-தன்னுடைய மிகநெருங்கின உறவினரையும், குடும்ப அங்கத்தவர்களையும் திருமணம் செய்வதை இஸ்ரவேலருக்குள் கர்த்தர் தடைசெய்துள்ளார். (Lev. 18:6–18; Deut. 27:20–23). கானானியருக்குள் கலப்புத் திருமணம் செய்தலாகாது ஏனெனில் அவர்கள் பாகால்வணக்கத்திற்கு வழிநடத்துவார்கள். (Deut. 7:1–4). ஆனால் அவர்கள் கானானியர்கள் மனம்மாறி இஸ்ரவேலராக வந்தால் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. யுத்தகாவலிலுள்ள பெண்ணை, அவளுடைய பெற்றோர் இறந்திருந்தால் அவர்களுக்கா ஒரு மாதம் துக்கம் கொண்டாடியபிற்பாடு திருமணம் செய்யமுடியும்.அவளுடைய கணவன் இறந்திருந்தால் அவள் சுயாதீனமானவள். அவளுடைய திருமணம் அவளை சட்டப்படி இஸ்ரவேலராக ஏற்றுக்கொள்ளும்.

ஆசாரியர்களின் திருமணத்திற்காக ஒரு விஷேடசட்டம் உண்டு. அவன் கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும். விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். (Lev. 21:7, 13–15).

திருமணபந்நத்தில் ,பெண்கள் சீதனம்செலுத்துவதில் சட்டத்தின்மூலம் பாதுகாக் கப்படுகின்றார்கள். கணவன் இறந்தால் அல்லது விவாகரத்துச் செய்தால் மனைவிக் குப்பெரும் தொகைப்பணம்கொடுக்கப்படல் வேண்டும்.பெரும் குற்றம் செய்பவர்கள் பெரும் தொகைப் பணத்தை குற்றத் தொகையாகக் கட்டவேண்டும். மனைவியைத் தன்னுடைய சொந்த மாமிசமாக நடத்தவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். (Deut. 21:10–14).

தகப்பனையும் தாயையும் பிள்ளைகள் கனம்பண்ண வேண்டும். (Ex. 20:12)பெண்களின் மாதவிடாய்காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு மனைவி பிள்ளைப்பெறும் வயதில், பிள்ளைகள் இல்லாமல் கணவன் மரித்துவிட்டால், அவனுடைய கிட்டத்து உறவினர் அவளைத்திருமணம் செய்து, பிள்ளைகள்பெற்று குடும்ப அந்தஸ்தைக் காப்பாற்றுவனாக. (Deut. 25:5–10).இவ்வகை யான நடவடிக்கைள் குடியியல் சட்டத்தின்படி ஏற்பாடுசெய்யப்படல் வேண்டும்.

குடும்பத்தில் கணவனுக்கே முதன்மை அதிகாரம் கொடுத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் மனைவியானவள் கணவனுக்கு கீழ்பட்டவளாக இருத்தல் வேண்டும். இது கணவனுக்கு கீழானவள் என்றோ அல்லது அடிமையானவள் என்றோ பொருள்படாது, ஆனால் அவர்கள் இருவரும் ஒருமாமிசமானவர்கள்.

வாடகை அடிமை:- பணக்கார்ரின் சூழ்ச்சிகளின் பிடியிலிருந்து கர்த்தர் ஏழைகளைப் பாதுகாக் கின்றார். பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்கார னுடைய கூலி விடியற் காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. (Lev. 19:13; Deut. 24:14).

அடிமைகள்:-அடிமைகள் இரண்டுவகைப்படும், சட்டப்படியான அடிமை, நிரந்தர அடிமை. கடன்கொடுக்கமுடியாமல் இருக்கும் இஸ்ரவேலர்கள் சட்டப்படியான அடிமையாவார்கள், அல்லது தற்கால அடிமையாகவிருக்கலாம். அடிமைக்காலம் ஆறுவருடங்களுக்கு நீடிக்கும் அல்லது

சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் அடங்கியுள்ள அடுத்தபெரிய சட்டமே சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும். கீழே காட்டப்படுபவை இந்தச் சட்டங்களில் அடங்கும்.

தொலைந்துபோன சொத்துக்கள்:-மோசேயின் நியாயப்பிரமாணங்களின் கீழ் எல்லா தொலைந்துபோன சொத்த்துக்களும் அதன் உரிமையாளர் யார் என்று கணடுபிடிக்கப் பட்சத்தில் அல்லது அவரால் உரிமைகோரும் பட்சத்தில் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக் கப்படல் வேண்டும். (Deut. 22:1–4).

பாதுகாப்பற்ற சொத்துக்கள்:- பாதுகாப்பற்றசொத்துக்களுக்கு(மிருகம்) அதன் உரிமையாளரே பொறுப்பாளியாவார். ஒருவரின் சொத்தினால் வேறுநபர் பாதிக்கப்படுவாராகில் அதன் உரிமையாளரே குற்றம் கட்டவேண்டும். மரணம் ஏற்பட்டால் அந்த உரிமையாளரின் சொத்தும்(மிருகம்) சாகடிக்கப்படல் வேண்டும். (Ex. 21:28–36; Deut. 22:8).

நிலத்தின் உரிமையாளர்:-உண்மையில் கர்த்தரே நிலத்தின் உரிமையாளராவார். (Lev. 25:23). தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவர்கள் அதனை ஏழாவது வருஷத்தில் பயிர்செய்யாமல் இளைப்பாறவிடும்படிவேண்டிக் கொள்கிறார். (Lev. 25:1–7).ஏழாம்வருடத்தில் பயன்தரும் நிலங்களின் அறுவடையை அறுக்காமல் வழிப்போக்கர்களுக்கும் வறியவர்களும் சாப்பிடும்படி விடப்படுதல்வேண்டும். சில குறிப்பிட்ட நிலங்களை குறிப்பிட்ட குடும்பங்கள் பயிர்செய்து பிழைக்கும்படி விடப்படல் வேண்டும். 50தாவது வருடத்தில் அதன் உரிமையாளர்களிடம் அந்த நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படல் வேண்டும். (Lev. 25:8–24)

சுதந்தரித்துக் கொள்வதற்கான ​சட்டங்கள்:-சாதாரணமாக சட்ரீதியான பிள்ளைகளுக்கு குடும்பச் சொத்துக்களைச் சுதந்தரிக்கும் உரிமையுண்டு. மூத்தமகனுக்கு மற்றப் பிள்ளைகளைவிட இரண்டுபங்கு சுதந்திரம் உண்டு. (Deut. 21:15–17; 25:6). மூத்தமகன் தனது வயதுசென்ற பெற்றோரைப்பராமரித்து அவர்கள் மரிக்கும் வேளையில் அவர்களை அடக்கம்செய்வதும் அவரது கடமை.யாகும். துஷ்டமகனுக்கு அதில் பங்குகிடையாது. ஆண்பிள்ளைகள் இல்லாதவிடத்துபெண்பிள்ளைகளுக்கு அந்தச் சொத்துக்கள் செல்லும்.அந்தப் பெண்பிள்ளை தங்கள்சொந்தத்திற்குள்ளேயே திரமணம் செய்தல்வேண்டும். (Num. 36:1–12).

நன்றி

திராணி

Read more

யார் உண்மையான தெய்வம் ?

Posted in
by Abiramam jo

உலகில் தெய்வமென்று வணங்கப்படுபவர் பலர், வணங்கப்படுபவைகள் பல உண்டு. உலகில் தெய்வமென்பவைகளின் வரலாறுகளைக் கூறும் நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஏனைய நூல்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், இவைகளெல்லாவற்றிலும் மேலாக தெய்வம் என்று சொல்லத்தக்க தகுதி படைத்த ஒரே ஒருவர், இயேசு கிறஸ்து மட்டுமே…!

கட்டுக்கதை அல்ல

இயேசு கிறஸ்து ஒரு கட்டுக்கதை அல்லது, புராணக் கதையில் வரும் ஒரு கற்பனை நபர் அல்ல. அவர் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்தார். 

 கிறிஸ்துவுக்கு முன் (கி.மு.) கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி.) என்று கிறிஸ்துவின் காலத்தின் வழியாகத்தான் உலக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் உலகில் வாழ்ந்தார் என்பது உறுதி. இப்பொழுது இஸ்ரயேல் என்று அழைக்கப்படும் ஆசிய நாடு, ரோமப் பேரரசினால் ஆளப்பட்ட காலத்தில், அகுஸ்து இராயன் (Augustus Caesar) என்பவர் ரோமப் பேரரசனாக இருந்தபோது இயேசுகிறிஸ்து பிறந்தார். அவருடைய வரலாறு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் எழுதியுள்ள நற்செய்தி நூல்களாகவும், இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற நூலாகவும், இதை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமம் (பைபிள்) என்ற பெரிய நூலாகவும் கிடைக்கின்றது.

வாங்கி வாசித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் தெய்வீகப் பண்புகள் யாவும் ஒருங்கே அமைந்திருப்பதை நீங்கள் அவருடைய வரலாற்றில் கண்டுகொள்வீர்கள். (பைபிள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகட்கு முன் எழுதி முடிக்கப்பட்ட 66 நூல்களின் தொகுப்பு ஆகும். அதின் பழைய காலப்பிரதிகள் இன்றும் உள்ளன. அது சரித்திர ஆதாரம் கொண்ட உண்மை நூலாகும்).

பரிசுத்தம் உள்ளவர்

 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையினின்று வேறுபட்டதாகும். அவர் பொய் ஏதும் சொல்லவில்லை, திருடவில்லை, ஏமாற்றவில்லை, வன்முறையில் ஈடுபடவில்லை, பாலியல் குற்றம் ஏதுவும் புரியவில்லை, தான் சொன்னதைத் தவறு என்று, மாற்றியதே இல்லை. அவருடைய வாழ்க்கை முழுவதிலும் பரிசுத்தம் காணப்பட்டது. அவருடன் நெருங்கிப் பழகி அவருடன் வாழ்ந்து வந்த அவருடைய சீடர்களும், அவருக்கு எதிரிகளாக இருந்த குழுக்களைச் சார்ந்தவர்களும், பொது மக்களும் இருந்த இடத்தில் யாவரையும் நோக்கி, “என்னிடத்தில் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?” என்று கேட்டார். ஒருவராலும் அவர் மீது ஒரு குறையும் சொல்ல முடியவில்லை. அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும், அவருக்கு மரண தண்டனை வழங்கிய ஆளுநராகிய பிலாத்துவும், அவர் குற்றமற்றவர் என்றுதான் கூறினார்கள். புதிய ஏற்பாடு நூலை வாசித்தால் அவருடைய வாழ்க்கையின் பரிசுத்தத்தை நீங்கள் காணலாம். இவ்விதமாகப் பரிசுத்தமாக வாழ்ந்து காட்டியவர் வேறு யாருமில்லை. இயேசு கிறஸ்து மட்டுமே…!

இயேசு மிகுந்த ஆற்றலுள்ளவர்

 இயற்கையின் மீதும் எல்லா நோய்களின் மீதும் பெரும் ஆற்றல் கொண்டவராக இயேசு கிறிஸ்து திகழ்ந்தார்.

தன்னுடைய சீடர்களோடும் தாயாருடனும் ஒரு திருமண விருந்தில் பங்கேற்றபோது, அத்திருமணத்தில் மக்கள் அருந்தும் பானமாகிய திராட்சரசம் தீர்ந்துவிட்டது. அவ்வீட்டில் இருந்த, கல்லினால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை நிரப்பச் சொல்லி, அத்தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றி, அவர்களின் சிக்கலைத் தீர்த்தார். இயேசுகிறிஸ்து இன்னொரு முறை தமது சீடருடன் அவர் கடலில் படகுப் பணம் செய்தபோது சூறாவளிக் காற்றினால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இயேசு காற்றையும் கடலையும் நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு,” என்று கட்டளையிட்டார். உடனடியாக, சூறாவளிக் காற்று நின்றது. கடலின் கொந்தளிப்பும் அடங்கிற்று. இயற்கையின்மீது அவரது ஆற்றலை, இதன் மூலம் அறிகிறோம்.

இயேசு அற்புத சுகமளிப்பவர்

 தொழுநோயால் நிரம்பியிருந்த ஒருவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “ஆண்டவரே, உமக்கு விருப்பமானால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்”, என்று கூறினான். இயேசு மனமுருகி அவனைத் தொட்டு உடனடியாகச் சுகமளித்தார். அவரிடம் வந்த பர்வையற்றவர்கள் யாவருக்கும் பர்வையளித்ததார். பேசமுடியாதோர், காது கேளாதோர் பேசவும் கேட்கவும் செய்தார். பக்கவாதத்தால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்தவர்களை எழும்பி நடமாடச் செய்தார், இரத்தப் போக்கை நிறுத்திச் சுகமளித்தார், முடவர்களை நடக்கச் செய்தார். இவ்வாறு, எல்லா நோய்களினின்றும் குணமாக்கினார்.

செத்துப்போன சிலரையும் உயிருடன் எழுப்பினார். அவரைத் தொட்ட யாவரும், அவரால் தொடப்பட்ட யாவரும் குணமடைந்தார்கள். இவற்றைக் கண்டவர்கள் எழுதி வைத்துள்ளனர். (புதிய ஏற்பாட்டை வாங்கி வாசித்துப் பாருங்கள்)

இயேசு இப்பொழுதும் சுகமளிக்கிறார்

 இயேசுவின் சுகமளிக்கும் ஆற்றல், இன்றும் செயல்படுகிறது. அவருடைய ஊழியர் பலர், இயேசுவின் பெயரால் அநேகரைக் குணமாக்குவது உலகெங்கும் (தமிழகத்திலும்) நடைபெற்று வருகிறது. பலர் சுகமாவதை, நான் நேரில் கண்டிருக்கிறேன். மேலும் நான் மருத்துவரால் குணமாக்க முடியாத நிலையில் மரணப்படுக்கையில் இருந்தேன். நான் மிகவும் சுகவீனப்பட்டு மரண தருணத்திலே இருந்த போது இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து பிழைத்திருக்கிறேன். இயேசு என்னை முற்றிலும் சுகமாக்கினார். இவற்றினின்று, இயேசு மிகுந்த ஆற்றலுள்ளவராக இருப்பதையும், உலகில் மனிதனாக வாழ்ந்த காலத்திலும், இன்றும் அவர் பல அற்புதங்களைச் செய்வதையும், நீங்கள் உணரலாம். (இதை வாசிக்கும் நண்பரே, நீர் ஏதேனும் இன்னல், நோய் போன்றவற்றில் உழன்றால், இப்பொழுதே அவரை நோக்கி வேண்டுதல் செய்து விடுதலை பெற்றுக்கொள்ளலாம்) இயேசு கிறிஸ்து செய்யும் அற்புதங்கள் யாவும் மக்களுக்கு நன்மை தருபவையாக அமைந்திருப்பதை நாம் காணலாம். மக்களின் தொல்லைகளையும், நோய்களையும் பார்த்து மனம் இரங்கி உதவி செய்கிறவர் இயேசு. (யார் அற்புதங்களைச் செய்தாலும் அதனால் என்ன நன்மை என்று ஆராய்ந்து பாருங்கள்).

அன்பின் தெய்வம்

 எவரிடமும் காணாத அளவிற்கு மக்களிடம் அன்பு செலுத்தியவர் இயேசு. 

 அன்பினிமித்தம் தம்மையே நமக்காகப் பலியாகக் கொடுத்தார். இதற்கான விளக்கத்தைக் கீழே காண்போம்.

 இவ்வுலகிலுள்ள யாவருமே தவறு செய்கிறவர்களாக ஆகி விட்டனர். “எல்லாரும் வழிதப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.

நன்மை செய்கிறவன் இல்லை: ஒருவனாகிலும் இல்லை” என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. இது உண்மை என்பதை நாம் அறிவோம. நாம் தவறு செய்யாத பரிசுத்தர்கள் அல்ல. நமது நினைவுகளாவும் சொற்களாலும் செயல்களாலும் அடிக்கடி தவறு செய்வதே, நமது அன்றாட வாழ்க்கையின் நிலையாகும். ஆனால் கடவுள் நீதியுள்ளவராக இருக்கின்றபடியால் அவரவர் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகளை அவர் வழங்கியே ஆகவேண்டும. இதற்கு மாறாக, கடவுள் அன்புள்ளவராகவும் இருக்கிறார். அவருடைய அன்பு உள்ளம், மனிதளை மன்னிக்க விரும்புகின்றது. எனவே, தண்டனை வழங்க வேண்டியவராகவும் மன்னிப்பு வழங்க வேண்டியவராகவும் இருக்கும் சூழ்நிலையில், நீதி தவறாமல் மன்னிப்பு வழங்க கடவுள் ஏற்பாடு செய்தார். அதற்காக, அந்த உலகிற்கு இயேசு என்ற பெயரில் தாமே வந்து, தெய்வம் இவ்வுலகில் வாழ்ந்தால் எப்படி வாழ்வார்? என்று வாழ்ந்து காட்டி, தமது உலக வாழ்க்கையின் இறுதியில், மனிதன் செய்யும் பாவங்களுக்கு அவனுக்கு வரவேண்டிய தண்டனைகளைத் தாமே ஏற்றுக்கொண்டார். தம்மைக் கைது செய்யவும், சிலுவையில் அறைந்து கொலைசெய்யவும் ஒப்புக்கொடுத்தார்.

 அசுத்தமான எண்ணங்களை நாம் நினைப்பதற்கு, நமக்கு வரவேண்டிய தண்டனைக்குப் பதிலாக, முட்களால் செய்யப்பட்ட கிரீடம் இயேசுவின் தலையில் வைக்கப்பட்டது. தலையினின்று இரத்தம் சொட்டியது. முகத்தினால் நாம் செய்யும் தவறுகளுக்காக, நமக்குப் பதிலாக அவருடைய முகத்தில் அடித்து, துப்பினார்கள். (உங்களை நோக்கி யாரேனும் துப்பினால் உங்களுக்கு எவ்வாறு இருக்கும்? இயேசுவையோ முகத்தில் துப்பினார்கள்). உடம்பெல்லாம் சவுக்கால் அடித்தார்கள். கைகளையும் கால்களையும் சிலுவை மரத்தில் சேர்த்து, பெரிய ஆணிகளால் அடித்து, அவரைத் தொங்கவிட்டார்கள். நமது உடம்பினாலும் கைகள் கால்களாலும் நாம் செய்யும் பாவங்களுக்கு, நாம் அடையவேண்டிய தண்டனைகளை இயேசு தமது உடலில் ஏற்றுக்கொண்டார். உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால்கள்வரை இயேசு காயப்படுத்தப்பட்டார். இறுதியில், அவர் உயிர்விட்டபோது, அவருடைய விலாவிலே ஈட்டியைப் பாய்ச்சினார்கள். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, “நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. என்று, வேதம் தெளிவாகக் கூறுகிறது. இவ்விதமாக நமது பாவங்களுக்கான தண்டனைகளைத் தாம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதால், நமது பாவங்களை அவர் மன்னிக்கிறார். துரோகியான, பாவியான மனிதனுக்ககத் தெய்வம் இவ்வுலகிற்கு வந்து இவ்விதமான கோரமான பாடுகளை ஏற்றுக்கொண்ட இந்த மாபெரும் அன்பைச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுவைப் போன்று மனுக்குலத்தை நேசித்தவர்கள் வேறு எவரும் இல்லை. (இந்த அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்.

இந்த மாபெரும் அன்பைப் பார்த்த நான் அவரை ஏற்றுக்கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? இந்த அன்பிற்கு நான் அடிமை).

 சிலுவையில் நமக்காக இரத்தத்தைச் சிந்தி, நமக்காகத் தமது உயிரைக் கொடுத்த இயேசுவை ஒரு கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாளில் கல்லறையினின்று உயிரோடு எழுந்தார். இதற்கு வரலாறு பூர்வமான அநேக ஆதாரங்கள் உண்டு. அவருடைய கல்லறை அன்று முதல் இன்றுவரை திறந்தே இருக்கின்றது. அவர் உயிர்த்தெழுந்த பின்னர் அவரைப் பார்த்தவர்கள் அதைக்குறித்து எழுதியுள்ளனர் தாங்கள் எழுதியவற்றின் உண்மைகளை நிலைநிறுத்துவதற்காகத் தங்களின் உயிரையும் ஈந்துள்ளார்கள். மேலும், அன்று முதல் இன்று வரை இயேசுவை நம்பியதால் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைப் பெற்றுள்ள கணக்கில்லர் மனிதர்களும், நோய்களின்று விடுதலை பெற்றவர்களும் இயேசு உயிரோடு எழுந்ததற்குச் சான்றுகளாவார்கள்.

 
 நானும் ஒரு சாட்சி. என் வாழ்க்கையில் பல தவறுகள் இருந்தன. ஓரு நாள், என் குற்றங்களை மனதிற்குள்ளாக அவரிடம் கூறி, என்னை மன்னிக்கும்படியும் மாற்றும்படிக்கும் வேண்டிக்கொண்டேன். என் வாழ்க்கையை அவர் மாற்றினார். என் உள்ளத்தில் சமாதானத்தையும் நிம்மதியையும் தந்தார். மேலும் நான் ஏற்கனவே கூறியுள்ளது போல என் நோயைக் குணமாக்கி எனக்கு வாழ்வு தந்தார்.

 செத்துப் போன மனிதன் எவனும் என்னை மாற்றவோ குணமாக்கவோ முடியாது. உயிருடன் இருக்கும் தெய்வத்தால்தான் முடியும். 

எனவே இயேசுகிறிஸ்து இன்றும் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கு நான் ஒரு சாட்சி.



உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தனது உயிர்த்தெழுந்த சரீரத்தோடு விண்ணுலகம் ஏறிச் சென்றார். ஆனால் இப்போது யாவருக்கும் பரிசுத்த ஆவியினால் அருள்புரிகிறார். மேலும், அவர் மீன்டும் இவ்வுலகிற்கு வரப் போவதை வேதம் நமக்கு நன்கு எடுத்துரைக்கிறது. அவர் வருகைக்கு முன் நடக்கும் காரியங்கள் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளவை வேகமாக நிறைவேறி வருகின்றது,

இயேசு கிறிஸ்துவைப்போன்று வேறு யாரும் இல்லையோ?

இயேசுவைப்போன்று பரிசுத்தம் உள்ளவர்…,

இயேசுவைப் போன்று ஆற்றல் உள்ளவர், இயேசுவைப் போன்று மக்களின் நோய்களைக் குணமாக்குகின்றவர், இயேசுவைப் போன்று நம்மை நேசித்துத் தம்மையே நமக்காகக் கொடுத்தவர், இயேசுவைப்போன்று மன்னிப்பளிப்பவர் எவரும் இல்லவே இல்லை.

 நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்பது எனக்குத் தெரியாது. யாரையும் குறை கூறுவதும் தாக்குவதும் எனது நோக்கமல்ல. ஆனால் தெய்வத்திற்கு இருக்கவேண்டிய பண்புகளான பரிசுத்தம், ஆற்றல், சுகமளித்தல், அன்பு ஆகியவை இல்லாத எவரையும் தெய்வமாக வணங்குதல் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பண்புகள் உடைய யாரேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். அப்படி இருப்பவர்களைத் ஏற்றுக் கொள்ள நான் தயார். அவ்வாறு வேறு யாரேனும் இல்லையெனில்…, உண்மையான தெய்வமாகிய, நமக்குச் சமாதானமும் பாவமன்னிப்பும் சுகமும் அருளுகிற, அன்பின தெய்வமாகிய, நமக்காகத் தமது இரத்தத்தைத் சிந்தி, பாடுபட்டு, உயிர்விட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த, ஒரே தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை, ஏற்றுக்கொள்ளுங்கள். , இது மதமாற்றம் அல்ல, மனமாற்றம்.

Read more

(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக் காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள்.

வேதாகமத்தில் பல உடன்படிக்கைகள் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்டதையும் அதனை மேற்கொண்டு நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளையும் அவை முறிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அவதானம் செலுத்துவோமாக.

1. ஏதேன் தோட்டதில் ஆதாமுடன்செய்யப்பட்ட உடன்படிக்கை.:-

ஆண்டவர் முதல் மனிதனை உருவாக்கினார். Ge. 1:27
அவனை பல்கிப் பூமியை நிரப்பும்படி கட்டளையிட்டார் Ge.1;28
அவனுக்கு சகல மீருகங்கள் மீதும் ஆளுகையைக் கொடுத்தார் Ge.1:28
தோட்டத்பை பராமரித்து அதில் கிடைக்கும் பலனை அனுபவிக்க் கூறினார். Ge.1;29
நன்மை தீமை அறியும் மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடவேண்டாம் என்று கூறினார்.. அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்..(Gen 2:16

ஏதேன்தோட்டத்து உடன்படிக்கை மிகவும் முக்கியமானதாகவுள்ளது. இங்கு எல்லாக்கனிகளையும் நீங்கள்புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறிந்து கொள்ளும் விருட்சத்தின் கனிகளை மட்டும் புசிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னார். அது மட்டுமன்றி அதைச் சாப்பிட்டால் கண்டிப்பாகச் சாகவே சாவாய் என்று கூறினார். இங்கு இந்த உடன்படிக்கையை மீறும் பொழுது மரணம் நிச்சயம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இங்கு ஆண்டவர் சொல்லாமல் கூறியுள்ள விடயம் ஒன்று மறைந்து காணப்படுகின்றது, அதாவது அந்தக்கனியை மட்டும் நீ சாப்பிடாமல் எனது உடன்படிக்கையைக் காத்து நடந்தால் உனக்கு மரணமே இல்லை என்பதாகும்.. ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். Gen 3: 22-24)

இங்கு நாம் உற்றுநோக்கும் போது மிகவும் துக்கமான சம்பவத்தை காணமுடிகிறது. அதாவது ஜீவ்விருட்சத்தின் கனியை புசிப்பதற்குப்பதிலாக தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டு தனக்குத்தானே மரணத்தை வருவித்த்து மட்டுமல்லாமல் பரம்பரைக்கே மரணத்தை வருவித்துக் கொண்டார்கள். அதாவது முதலில் அவர்களுக்கு ஏற்பட்டது ஆவிக்குரிய மரணமாகும். அதன் விளைவு கர்த்தருடைய ஆவிக்கும் இவர்களுடைய ஆவிக்குமிடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இன்னும் விளக்கமாக கூறுவதானால் மனிதனுக்கு ஆண்டவரால்கொடுக்கப்பட்ட ஜீவ ஆத்துமாவின் ஒருபகுதியாகிய ஆவியின் செயற்பாடு அணைந்து போயிற்று .பாவம் ஆவியின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல் அசுத்த ஆவியின் செயற்பாட்டை உள்வாங்க சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆகவே உடன்படிக்கைகளை மீறாமல் வாழ முயற்சி செய்வோம்.

உடன்படிக்கைமேற்கொள்ளப்பட்டிருந்தால் கிடைத்திருக்கும் நன்மை:

1 . மரணம் ஏற்பட்டிருக்காது.. நித்திய ஜீவன் ஏற்பட்டிருக்கும்

2. ஏதேன் தோட்டத்திலிருந்துவெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள்.
3. பாவம் அற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்போம்.
4. அனுதினமும் தேவனுடன் பேசிக் கொண்டிருந்திருப்போம்.

உடன்படிக்கை முறிவடைந்த்தால் ஏற்பட்ட தீமை .

1. பாவம் ஏற்பட்டது
2. ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டமை.
3. தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் தொடர்பற்ற நிலை.
4. பிசாசுடன் மனிதனுக்கு தொடர்புகள் ஏற்பட்டமை.

ஆதாமுடனான உடன்படிக்கை.மீறப்பட்டதனால் ஏற்பட்ட விளைவு.(Gen. 3:14–19)

ஆதாம் உடன்படிக்கையை ஏதேன் தோட்டத்தில் மீறியதனால்

சாபம் கொட்கப்பட்டது

வீழ்ச்சிக்குப்பிற்பாடு கர்த்தர் பழையபாம்பை சபித்தார்,
அத்துடன் பாம்பிற்கும் ஏவாளுக்குமிடையில் பகையை உண்டாக்கினார்.
அத்துடன் பாம்பிற்கும் கிறிஸ்துவிற்குமிடையில் பகையை உண்டாக்கினார். ( ஸ்திரியின் வித்து கிறிஸ்துவாகும்)
சாத்தான் கிறிஸ்துவை காயப்படுத்துவான் என்றும் கிறிஸ்து பாம்பை அழித்துப் போடுவார் என்றும் சாபம் வந்தது.
பெண்கள் கணவனின் ஆளுகைக்குள் வருவார்கள் என்றும் பிள்ளை பெறும் போது வேதனையை அனுபவிப்பார்கள் என்றும் சாபமிடப்பட்டது.
பூமியான சபிக்கப்பட்டது பயிரிடும் காலங்களில் களைகளின் தொல்லையை அனுபவிப்பான் என்றும் கட்டளையிடப்பட்டது.
அவன் மரணமடையும்வரை நெற்றிவியர்வை சிந்தி வாழ்வான் என்றும் கட்டளையிடப்பட்டது.

மேற்கூறிய அத்தனை சாபஉடன்படிக்கைகளும் ஆதாம் உடன்படிக்கையை மீறியதனால் ஏற்பட்ட சாப உடன்படிக்கையாகும். அதாவது ஒவ்வொரு உடன்படிக்கைகளைமீறுதல்களுக்குப் பின்னால் அவை சாபத்தைக் கொண்டுவரும் என்பதை எம்மால் நன்கு உணரக்கூடியதாகவேயுள்ளது. மிகுந்த அவதானத்துடன் உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்வோம்.

நோவாவுன் செய்த உடன்படிக்கை (Gen. 8:20–9:27)

ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிற்பாடு ஜனங்கள் பாவம்செய்தபடியால் கர்த்தர் மனுஷனை உண்டாக்கியதற்காக மனஸ்தாப்ப்பட்டார். அதன்பயனாக நோவா என்கிறவரின் குடும்பத்தைத்தவிர மிகுதியானவர்களை உலகத்திலிருந்து அழித்துவிட முடிவு செய்து உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழித்தார்.
பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
இனி மாம்சமானவைகளெல்லாம்ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவ தில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை யென்றும், உங்களோடே என் உடன் படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ ஜந்துக்களுக்கும்,
நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடை யாளமாக: நான் என் வானவில்லை மேகத்தில் வைத்தேன்;
அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.

இங்கு ஜலப்பிரளயத்தினால் மக்களை அழித்த்தைக்குறித்து அவர் மனதில் சஞ்சலம் கொள்வது போல ஒருதேற்றத்தை எம்மால் அவதானிக்க முடிகிறது. மனிதனின் பாவச் செயல்களை ஏற்றுக் கொள்ளமுடியாமலே அவர்கோபங் கொண்டு மனிதவர்க்கம் அனைத்தையும் அழித்தார். நோவாவின் குடும்பத்திற்கூடாகவரும் சந்ததியாவது தன்னை ஆராதிக்கும் என்றும் தன்னோடு தொடர்பில் இருக்கும் என்றும் நம்பினார். அதுமட்டுமல்ல இந்தக்குடும்த்தினூடாகவே பிந்தின ஆதாமாகிய இயேசுவும் வரவேண்டியிருந்தபடியால் அவர் நோவா குடும்பத்தைக் காப்பாற்றினார்.

நோவாவிற்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அதில் காம் என்பவனின் தவறாநடத்தைன காரணமாகச் சபிக்கப்பட்டான். அவன் சேம், யாபெத் என்பவர்களுக்கு அடிமையாகவே ஜீவித்தான்.
சேமுடைய சந்ததியில்மேசிய பிறப்பதற்கான கிருபையைக் கொடுத்தார்.
யாபேத் விருத்தியாகி சேமுடைய கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.

இங்கும் தன்னை ஆராதிக்க மறந்த மக்களையேதேவன் பார்க்கிறார். தன்னை ஆராதிக்கும் படி எதிர்பார்த்தவர்கள் ஒருவரையும் காணவில்லை. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும்,நெருப்பையும் வணங்கும் மக்களையே அவரால் காணமுடிந்த்து. உருவாக்கிய தேவனை மறந்து அவரால் உருவாக்கப்பட்டவற்றை வணங்குபவர்களையே அவரால் காணமுடிந்தது.

ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை. (Gen. 12:1–3; 13:14–17; 15:1–8; 17:1–8)

ஆபிரகாம் தன்னை வணங்கவேண்டும் எனபதற்காகவும் அவர்மூலமாக தன்னை ஆராதிக்கும் ஜாதியொன்றை உருவாக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த ஜாதியின்மூலம் உலகத்திலுள்ள மற்ற ஜாதிகளெல்லாம் தானே மெய்யானதேவன் என்பதை அறிந்து தன்னை ஆராதிக்க வேண்டும் என்பதற்காகவுமே ஆபிரகாமை ஆண்டவர் தன் விருப்பத்தின்படி தெரிவு செய்தார். ஆபிராம் ஊர் என்னம் தேசத்தில் வாழ்நத போது அவனது தனப்பன் சந்திரவணக்கம் (moon god)செய்பவராக இருந்.தார். அப்படியிருந்தும் ஆண்டவர் அந்தக்குடும்பத்தைத் தன்னை ஆராதிக்கும்படி ஆண்டவர் தெரிவு செய்தார். உன்னையும் அப்படியே ஆண்டவர் தெரிவு செய்துள்ளார் என்பதை மறந்து போகாதே , அவருக்கு உண்மையாயிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வாயாக. ​ ​ ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை நிபந்தனையற்றது. ஏனெனில் உடன்படிக்கைக்கா பலியிடப்பட்டபோது கர்த்தர் தாமே தனிமையாக அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோனார். அங்கு ஆபிரகாம் பங்குபற்றவில்லை. அதனாலே இந்த உடன் படிக்கை நிபந்தனைகள் ஏதும் அற்றது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த உடன்படிக்கை கீழே காணப்படும் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது.

1. நீ ஆசீர்வாதமாகவிருப்பான் 12:2
உன்பேரைப் பெருமைப் படுத்துவேன் 12:2
நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவிருப்பாய்(12:2); எல்லாதேசத்தா ருக்கும் ஆசீர்வாதமாயிருப்பாய்(12:3);
உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன், சபிக்கிறவர்களைச் சபிப்பேன். 12:3);

கானான் தேசத்தை உனக்குத் தருவேன்( கானான்—பின்பு இஸ்ரவேல் பின்னபு—பாலஸ்தீனம்) 13:14, 15, 17);
6. உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; 13:16; நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். (17:4 ) உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாக இருக்கும் என்றார். 15:5 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணுவேன் 17:6 உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன் 17:6 உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். 17:6
7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பேன். 17:7

நீயும் ஆண்டவரால் அழைக்கப்பட்டு அவருக்கு உண்மையாய் வாழ்ந்துவந்தால் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத் தத்தங்கள் யாவும் உனக்குரியதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

ஆபிராம் என்பதன் பொருள் தகப்பன் என்பதாகும் ஆபிரகாம் என்று தேவன் அவரது பெயரை மாற்றினார். அபிரகாம் என்பதன் பொருள் பல ஜாதிகளுக்குத் தகப்பன் என்பதாகும். கிறிஸ்துவை எற்றுக் கொண்டபின்பும் உன்னுடையபெரும் இவ்வாறு மாற்றப்படல் வேண்டும்.

மோசேயுடன் செய்த உடன்படிக்கை. (Ex. 19:5; 20:1–31:18).

இந்த உடன்படிக்கை மிகவும் விசாலமானது. இதற்குள் 10 கற்பனைகளும் அடங்குகின்றன.கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும், அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் விளக்கிக் கூறப்படுகின்றன. (Ex. 20:1–26); சமூகவாழ்க்கைக்கான அனேக சட்டதிட்டங்கள்கொடுக்கப்பட்டுள்ள்ன. (Ex. 21:1–24:11); சமயவாழ்விற்கான விபரமான சட்டங்கள் இதில் அடங்குகின்றன. (Ex. 24:12–31:18).இவைகள் அனைத்தும் இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கொடுக்கப்பட்டதேயன்றி புறஜாதிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஒரு நிபந் தனையுடனான உடன்படிக்கையாகும், மனிதர்களின் கீழ்படில் அவசியமானதாகும், அதனால் இது மாமிசத்தில் பலவீனமானது (றொ. 8: 3)புதிய ஏற்பாட்டில் ( ஓய்வுநாளைத்தவிர )ஒன்பது கட்டளைகளும் திருப்பிக்கூறப்பட்டுள்ளன.

கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்
1.“ என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். ” (Ex. 20:3).

6. “கொலை செய்யாதிருப்பாயாக. ” (Ex. 20:13).
2. “சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; ” (Ex. 20:4).

7. “You shall not commit adultery” (Ex. 20:14). விபசாரம் செய்யாதிருப்பாயாக.

3. “தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;. ” (Ex. 20:7).

8. “You shall not steal” (Ex. 20:15). களவு செய்யாதிருப்பாயாக.

4 “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;” (Ex. 20:8).

9. “You shall not bear false witness against your neighbor” (Ex. 20:16).பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
5“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” . (Ex. 20:12).

10.“பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக”; (Ex. 20:17).

.

பாலஸ்தின உடன்படிக்கை .(Deut. 30:1–9)

இஸ்ரவேலர்கள் கர்த்தரை மறந்து அந்நியதெய்வங்களை நமஸ்கரித்து வந்தபடியால் அவர்கள்மீது தேவகோபம் ஏற்பட்டது. அதன்காரணமாக வேறுதேசங்களுக்குள் சிதறடித்தார்.

அப்பொழுது, அவர்கள் தங்கள் இருதயத்திலே சிந்தனைசெய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்தால் உன் தேவனும் கர்த்தருமாகிய நான் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவேன்
உங்கள் இருதயத்தையும் உங்கள் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணுங்கள்.
அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர்கிய நான் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வேன்

கர்த்தர் தாவீதுடன் ஏற்படித்திய உடன்படிக்கை(2 Sam. 7:5–19)

1. நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
2. அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
3. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
4. உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
5. உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல்லச்சொன்னார்.

இந்த இராஜ்ஜியம் மட்டுமல்ல , எப்பொழுதும் உனது சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சந்த்தியை உனக்கு உண்டாக்குவேன். இது ஒரு நிபந்தனையற்ற உடன்படிக்கையாகும். தாவீதுடைய கீழ்ப்படிதலினாலோ அல்லது அவருடைய நீதியினாலோ ஏற்படுவதல்ல. இது ஆதாமுடன்செய்து கொண்ட உடன்இடிக்கையின் ஒரு பகுதியாகும்.அதாவது “ஸ்திரீயின் வித்து உன் தலையை நசுக்கும்” என்ற வாக்குறுதியின் பொருட்டு .மேசியா வெளிப்படுவதற்கான ஒரு வழியாகும்.கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் பிறந்தார்.( மத் 1: 1-16)

புதிய உடன்படிக்கை (எரே. 31:31–34; எபி. 8:7–12; லூக் 22:20)

இஸ்ரவேல் மக்களோடும், யூதா மக்களோடும் புதிய உடண்படிக்கையானது தெளிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. (Jer 31:31 ) இது எதிர்காலத்திற்குரிய உடன்படிக்கையாகும். இது மோசே யுடன் செய்த உடன்படிக்கையைப்போல நிபந்தனையுள்ள உடன்படிக்கையல்ல.இங்கு நானே உங்களைச் சுத்தமாக்குவேன் என்றும் உங்கள் உள்ளத்தில் என் பரிசுத்த ஆவியை வைப்பேன் என்றும் என் கட்டளைகளில் உங்களை நடக்கப் பண்ணுவேன் என்றும் தெளிவாக்க் கூறுகி ன்றார். ( எசேக் 36:-25-27) நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிரு ப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.( எரே. 31: 33) நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.( எரே: 31: 34) இது என்றென்றைக்கும் நீடத்திருக்கும்(எரே.31:35-37) புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். சபையானது புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டது என்பதை கர்த்தருடைய இராப்போஜனத்தில் யேசு போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத் தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். இங்கு இந்தப் பாத்திரம் என்பது புதிய உடன்படிக்கை பிரதிபலிப்பதாகவும், அவருடைய இரத்தத்தினால் உறுதி செய்யப்படுவதாகவும் காணப்படுகிறது.

நன்றி

திராணி

Read more
Copyright 2010 @ Hello Abiramam Natham