உலகில் தெய்வமென்று வணங்கப்படுபவர் பலர், வணங்கப்படுபவைகள் பல உண்டு. உலகில் தெய்வமென்பவைகளின் வரலாறுகளைக் கூறும் நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஏனைய நூல்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், இவைகளெல்லாவற்றிலும் மேலாக தெய்வம் என்று சொல்லத்தக்க தகுதி படைத்த ஒரே ஒருவர், இயேசு கிறஸ்து மட்டுமே…!
கட்டுக்கதை அல்ல
இயேசு கிறஸ்து ஒரு கட்டுக்கதை அல்லது, புராணக் கதையில் வரும் ஒரு கற்பனை நபர் அல்ல. அவர் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்தார்.
கிறிஸ்துவுக்கு முன் (கி.மு.) கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி.) என்று கிறிஸ்துவின் காலத்தின் வழியாகத்தான் உலக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் உலகில் வாழ்ந்தார் என்பது உறுதி. இப்பொழுது இஸ்ரயேல் என்று அழைக்கப்படும் ஆசிய நாடு, ரோமப் பேரரசினால் ஆளப்பட்ட காலத்தில், அகுஸ்து இராயன் (Augustus Caesar) என்பவர் ரோமப் பேரரசனாக இருந்தபோது இயேசுகிறிஸ்து பிறந்தார். அவருடைய வரலாறு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் எழுதியுள்ள நற்செய்தி நூல்களாகவும், இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற நூலாகவும், இதை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமம் (பைபிள்) என்ற பெரிய நூலாகவும் கிடைக்கின்றது.
வாங்கி வாசித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் தெய்வீகப் பண்புகள் யாவும் ஒருங்கே அமைந்திருப்பதை நீங்கள் அவருடைய வரலாற்றில் கண்டுகொள்வீர்கள். (பைபிள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகட்கு முன் எழுதி முடிக்கப்பட்ட 66 நூல்களின் தொகுப்பு ஆகும். அதின் பழைய காலப்பிரதிகள் இன்றும் உள்ளன. அது சரித்திர ஆதாரம் கொண்ட உண்மை நூலாகும்). பரிசுத்தம் உள்ளவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையினின்று வேறுபட்டதாகும். அவர் பொய் ஏதும் சொல்லவில்லை, திருடவில்லை, ஏமாற்றவில்லை, வன்முறையில் ஈடுபடவில்லை, பாலியல் குற்றம் ஏதுவும் புரியவில்லை, தான் சொன்னதைத் தவறு என்று, மாற்றியதே இல்லை. அவருடைய வாழ்க்கை முழுவதிலும் பரிசுத்தம் காணப்பட்டது. அவருடன் நெருங்கிப் பழகி அவருடன் வாழ்ந்து வந்த அவருடைய சீடர்களும், அவருக்கு எதிரிகளாக இருந்த குழுக்களைச் சார்ந்தவர்களும், பொது மக்களும் இருந்த இடத்தில் யாவரையும் நோக்கி, “என்னிடத்தில் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?” என்று கேட்டார். ஒருவராலும் அவர் மீது ஒரு குறையும் சொல்ல முடியவில்லை. அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும், அவருக்கு மரண தண்டனை வழங்கிய ஆளுநராகிய பிலாத்துவும், அவர் குற்றமற்றவர் என்றுதான் கூறினார்கள். புதிய ஏற்பாடு நூலை வாசித்தால் அவருடைய வாழ்க்கையின் பரிசுத்தத்தை நீங்கள் காணலாம். இவ்விதமாகப் பரிசுத்தமாக வாழ்ந்து காட்டியவர் வேறு யாருமில்லை. இயேசு கிறஸ்து மட்டுமே…! இயேசு மிகுந்த ஆற்றலுள்ளவர் இயற்கையின் மீதும் எல்லா நோய்களின் மீதும் பெரும் ஆற்றல் கொண்டவராக இயேசு கிறிஸ்து திகழ்ந்தார்.
தன்னுடைய சீடர்களோடும் தாயாருடனும் ஒரு திருமண விருந்தில் பங்கேற்றபோது, அத்திருமணத்தில் மக்கள் அருந்தும் பானமாகிய திராட்சரசம் தீர்ந்துவிட்டது. அவ்வீட்டில் இருந்த, கல்லினால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை நிரப்பச் சொல்லி, அத்தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றி, அவர்களின் சிக்கலைத் தீர்த்தார். இயேசுகிறிஸ்து இன்னொரு முறை தமது சீடருடன் அவர் கடலில் படகுப் பணம் செய்தபோது சூறாவளிக் காற்றினால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இயேசு காற்றையும் கடலையும் நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு,” என்று கட்டளையிட்டார். உடனடியாக, சூறாவளிக் காற்று நின்றது. கடலின் கொந்தளிப்பும் அடங்கிற்று. இயற்கையின்மீது அவரது ஆற்றலை, இதன் மூலம் அறிகிறோம். இயேசு அற்புத சுகமளிப்பவர் தொழுநோயால் நிரம்பியிருந்த ஒருவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “ஆண்டவரே, உமக்கு விருப்பமானால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்”, என்று கூறினான். இயேசு மனமுருகி அவனைத் தொட்டு உடனடியாகச் சுகமளித்தார். அவரிடம் வந்த பர்வையற்றவர்கள் யாவருக்கும் பர்வையளித்ததார். பேசமுடியாதோர், காது கேளாதோர் பேசவும் கேட்கவும் செய்தார். பக்கவாதத்தால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்தவர்களை எழும்பி நடமாடச் செய்தார், இரத்தப் போக்கை நிறுத்திச் சுகமளித்தார், முடவர்களை நடக்கச் செய்தார். இவ்வாறு, எல்லா நோய்களினின்றும் குணமாக்கினார்.
செத்துப்போன சிலரையும் உயிருடன் எழுப்பினார். அவரைத் தொட்ட யாவரும், அவரால் தொடப்பட்ட யாவரும் குணமடைந்தார்கள். இவற்றைக் கண்டவர்கள் எழுதி வைத்துள்ளனர். (புதிய ஏற்பாட்டை வாங்கி வாசித்துப் பாருங்கள்) இயேசு இப்பொழுதும் சுகமளிக்கிறார் இயேசுவின் சுகமளிக்கும் ஆற்றல், இன்றும் செயல்படுகிறது. அவருடைய ஊழியர் பலர், இயேசுவின் பெயரால் அநேகரைக் குணமாக்குவது உலகெங்கும் (தமிழகத்திலும்) நடைபெற்று வருகிறது. பலர் சுகமாவதை, நான் நேரில் கண்டிருக்கிறேன். மேலும் நான் மருத்துவரால் குணமாக்க முடியாத நிலையில் மரணப்படுக்கையில் இருந்தேன். நான் மிகவும் சுகவீனப்பட்டு மரண தருணத்திலே இருந்த போது இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து பிழைத்திருக்கிறேன். இயேசு என்னை முற்றிலும் சுகமாக்கினார். இவற்றினின்று, இயேசு மிகுந்த ஆற்றலுள்ளவராக இருப்பதையும், உலகில் மனிதனாக வாழ்ந்த காலத்திலும், இன்றும் அவர் பல அற்புதங்களைச் செய்வதையும், நீங்கள் உணரலாம். (இதை வாசிக்கும் நண்பரே, நீர் ஏதேனும் இன்னல், நோய் போன்றவற்றில் உழன்றால், இப்பொழுதே அவரை நோக்கி வேண்டுதல் செய்து விடுதலை பெற்றுக்கொள்ளலாம்) இயேசு கிறிஸ்து செய்யும் அற்புதங்கள் யாவும் மக்களுக்கு நன்மை தருபவையாக அமைந்திருப்பதை நாம் காணலாம். மக்களின் தொல்லைகளையும், நோய்களையும் பார்த்து மனம் இரங்கி உதவி செய்கிறவர் இயேசு. (யார் அற்புதங்களைச் செய்தாலும் அதனால் என்ன நன்மை என்று ஆராய்ந்து பாருங்கள்). அன்பின் தெய்வம் எவரிடமும் காணாத அளவிற்கு மக்களிடம் அன்பு செலுத்தியவர் இயேசு. அன்பினிமித்தம் தம்மையே நமக்காகப் பலியாகக் கொடுத்தார். இதற்கான விளக்கத்தைக் கீழே காண்போம். இவ்வுலகிலுள்ள யாவருமே தவறு செய்கிறவர்களாக ஆகி விட்டனர். “எல்லாரும் வழிதப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.
நன்மை செய்கிறவன் இல்லை: ஒருவனாகிலும் இல்லை” என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. இது உண்மை என்பதை நாம் அறிவோம. நாம் தவறு செய்யாத பரிசுத்தர்கள் அல்ல. நமது நினைவுகளாவும் சொற்களாலும் செயல்களாலும் அடிக்கடி தவறு செய்வதே, நமது அன்றாட வாழ்க்கையின் நிலையாகும். ஆனால் கடவுள் நீதியுள்ளவராக இருக்கின்றபடியால் அவரவர் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகளை அவர் வழங்கியே ஆகவேண்டும. இதற்கு மாறாக, கடவுள் அன்புள்ளவராகவும் இருக்கிறார். அவருடைய அன்பு உள்ளம், மனிதளை மன்னிக்க விரும்புகின்றது. எனவே, தண்டனை வழங்க வேண்டியவராகவும் மன்னிப்பு வழங்க வேண்டியவராகவும் இருக்கும் சூழ்நிலையில், நீதி தவறாமல் மன்னிப்பு வழங்க கடவுள் ஏற்பாடு செய்தார். அதற்காக, அந்த உலகிற்கு இயேசு என்ற பெயரில் தாமே வந்து, தெய்வம் இவ்வுலகில் வாழ்ந்தால் எப்படி வாழ்வார்? என்று வாழ்ந்து காட்டி, தமது உலக வாழ்க்கையின் இறுதியில், மனிதன் செய்யும் பாவங்களுக்கு அவனுக்கு வரவேண்டிய தண்டனைகளைத் தாமே ஏற்றுக்கொண்டார். தம்மைக் கைது செய்யவும், சிலுவையில் அறைந்து கொலைசெய்யவும் ஒப்புக்கொடுத்தார். அசுத்தமான எண்ணங்களை நாம் நினைப்பதற்கு, நமக்கு வரவேண்டிய தண்டனைக்குப் பதிலாக, முட்களால் செய்யப்பட்ட கிரீடம் இயேசுவின் தலையில் வைக்கப்பட்டது. தலையினின்று இரத்தம் சொட்டியது. முகத்தினால் நாம் செய்யும் தவறுகளுக்காக, நமக்குப் பதிலாக அவருடைய முகத்தில் அடித்து, துப்பினார்கள். (உங்களை நோக்கி யாரேனும் துப்பினால் உங்களுக்கு எவ்வாறு இருக்கும்? இயேசுவையோ முகத்தில் துப்பினார்கள்). உடம்பெல்லாம் சவுக்கால் அடித்தார்கள். கைகளையும் கால்களையும் சிலுவை மரத்தில் சேர்த்து, பெரிய ஆணிகளால் அடித்து, அவரைத் தொங்கவிட்டார்கள். நமது உடம்பினாலும் கைகள் கால்களாலும் நாம் செய்யும் பாவங்களுக்கு, நாம் அடையவேண்டிய தண்டனைகளை இயேசு தமது உடலில் ஏற்றுக்கொண்டார். உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால்கள்வரை இயேசு காயப்படுத்தப்பட்டார். இறுதியில், அவர் உயிர்விட்டபோது, அவருடைய விலாவிலே ஈட்டியைப் பாய்ச்சினார்கள். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, “நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. என்று, வேதம் தெளிவாகக் கூறுகிறது. இவ்விதமாக நமது பாவங்களுக்கான தண்டனைகளைத் தாம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதால், நமது பாவங்களை அவர் மன்னிக்கிறார். துரோகியான, பாவியான மனிதனுக்ககத் தெய்வம் இவ்வுலகிற்கு வந்து இவ்விதமான கோரமான பாடுகளை ஏற்றுக்கொண்ட இந்த மாபெரும் அன்பைச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுவைப் போன்று மனுக்குலத்தை நேசித்தவர்கள் வேறு எவரும் இல்லை. (இந்த அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்.
இந்த மாபெரும் அன்பைப் பார்த்த நான் அவரை ஏற்றுக்கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? இந்த அன்பிற்கு நான் அடிமை). சிலுவையில் நமக்காக இரத்தத்தைச் சிந்தி, நமக்காகத் தமது உயிரைக் கொடுத்த இயேசுவை ஒரு கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாளில் கல்லறையினின்று உயிரோடு எழுந்தார். இதற்கு வரலாறு பூர்வமான அநேக ஆதாரங்கள் உண்டு. அவருடைய கல்லறை அன்று முதல் இன்றுவரை திறந்தே இருக்கின்றது. அவர் உயிர்த்தெழுந்த பின்னர் அவரைப் பார்த்தவர்கள் அதைக்குறித்து எழுதியுள்ளனர் தாங்கள் எழுதியவற்றின் உண்மைகளை நிலைநிறுத்துவதற்காகத் தங்களின் உயிரையும் ஈந்துள்ளார்கள். மேலும், அன்று முதல் இன்று வரை இயேசுவை நம்பியதால் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைப் பெற்றுள்ள கணக்கில்லர் மனிதர்களும், நோய்களின்று விடுதலை பெற்றவர்களும் இயேசு உயிரோடு எழுந்ததற்குச் சான்றுகளாவார்கள். நானும் ஒரு சாட்சி. என் வாழ்க்கையில் பல தவறுகள் இருந்தன. ஓரு நாள், என் குற்றங்களை மனதிற்குள்ளாக அவரிடம் கூறி, என்னை மன்னிக்கும்படியும் மாற்றும்படிக்கும் வேண்டிக்கொண்டேன். என் வாழ்க்கையை அவர் மாற்றினார். என் உள்ளத்தில் சமாதானத்தையும் நிம்மதியையும் தந்தார். மேலும் நான் ஏற்கனவே கூறியுள்ளது போல என் நோயைக் குணமாக்கி எனக்கு வாழ்வு தந்தார். செத்துப் போன மனிதன் எவனும் என்னை மாற்றவோ குணமாக்கவோ முடியாது. உயிருடன் இருக்கும் தெய்வத்தால்தான் முடியும். எனவே இயேசுகிறிஸ்து இன்றும் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கு நான் ஒரு சாட்சி.
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தனது உயிர்த்தெழுந்த சரீரத்தோடு விண்ணுலகம் ஏறிச் சென்றார். ஆனால் இப்போது யாவருக்கும் பரிசுத்த ஆவியினால் அருள்புரிகிறார். மேலும், அவர் மீன்டும் இவ்வுலகிற்கு வரப் போவதை வேதம் நமக்கு நன்கு எடுத்துரைக்கிறது. அவர் வருகைக்கு முன் நடக்கும் காரியங்கள் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளவை வேகமாக நிறைவேறி வருகின்றது, இயேசு கிறிஸ்துவைப்போன்று வேறு யாரும் இல்லையோ? இயேசுவைப்போன்று பரிசுத்தம் உள்ளவர்…,
இயேசுவைப் போன்று ஆற்றல் உள்ளவர், இயேசுவைப் போன்று மக்களின் நோய்களைக் குணமாக்குகின்றவர், இயேசுவைப் போன்று நம்மை நேசித்துத் தம்மையே நமக்காகக் கொடுத்தவர், இயேசுவைப்போன்று மன்னிப்பளிப்பவர் எவரும் இல்லவே இல்லை. நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்பது எனக்குத் தெரியாது. யாரையும் குறை கூறுவதும் தாக்குவதும் எனது நோக்கமல்ல. ஆனால் தெய்வத்திற்கு இருக்கவேண்டிய பண்புகளான பரிசுத்தம், ஆற்றல், சுகமளித்தல், அன்பு ஆகியவை இல்லாத எவரையும் தெய்வமாக வணங்குதல் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பண்புகள் உடைய யாரேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். அப்படி இருப்பவர்களைத் ஏற்றுக் கொள்ள நான் தயார். அவ்வாறு வேறு யாரேனும் இல்லையெனில்…, உண்மையான தெய்வமாகிய, நமக்குச் சமாதானமும் பாவமன்னிப்பும் சுகமும் அருளுகிற, அன்பின தெய்வமாகிய, நமக்காகத் தமது இரத்தத்தைத் சிந்தி, பாடுபட்டு, உயிர்விட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த, ஒரே தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை, ஏற்றுக்கொள்ளுங்கள். , இது மதமாற்றம் அல்ல, மனமாற்றம்.

0 comments:
Post a Comment